சிங்கப்பூரில் வருகின்ற 2040ம் ஆண்டுக்குள் முழுமையாக “கிரீன் எனர்ஜியால்” இயங்கும் பேருந்துகளை இயக்க நமது LTA பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு படியாக ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பழைய டீசல் பேருந்துகளை முற்றிலுமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது. அதே நேரம் வருகின்ற 2026ம் ஆண்டு இறுதியில் இருந்து மெல்ல மெல்ல கிட்டத்தட்ட 660 புதிய மின்சார பேருந்துகளை தீவு முழுவதும் இயக்க முடிவு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அண்மையில் வெளியானது. அந்த 660 பேருந்துகளில் 330 பேருந்துகள் 1 அடுக்கு கொண்ட பேருந்தாகவும்.
Do you have a Singapore Class 3 & 3A license? A super update that came into effect yesterday (Dec. 15)!
இதர 300 பேருந்துகள் இரண்டு அடுக்கு கொண்ட பேருந்துகளாகவும் வாங்கப்பட உள்ளது. சிங்கப்பூர் வரலாற்றிலேயே ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 300 இரட்டை அடுக்கு பேருந்துகளை LTA வாங்க உள்ளது இதுவே முதல் முறை. இப்படி மாசுபாடு என்பது எதிர்காலத்திலும் இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுத்து வருகிறது. இந்த சூழலில் நேற்று டிசம்பர் 15ம் தேதி முதல் சிங்கை அரசு அறிவித்த ஒரு முக்கியமான விதி அமலுக்கு வந்திருக்கிறது. அதுதான் கிளாஸ் 3 மற்றும் கிளாஸ் 3A ஓட்டுநர் உரிமம் உள்ள அனைவரும் இனி 3000 கிலோ எடை கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை இயக்கலாம் என்கின்ற தளர்வு. இந்த 3000 கிலோ எடை என்பது அந்த வண்டியில் சரக்கு ஏற்றப்படுவதற்கு முன்பு உள்ள எடை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Class 3 & Class 3A
சிங்கப்பூரில் எலக்ட்ரிக் வாகனங்களினுடைய பயன்பாட்டை அதிகரிக்கும் வண்ணமாகவும், முன்பு கூறியதைப் போல “கிரீன் எனர்ஜியை” அதிக அளவில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ளது தான் இந்த புதிய முடிவு. நேற்று டிசம்பர் 15ம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கும் வந்திருக்கிறது. அதன்படி ஏற்கனவே Class 3 மற்றும் 3A வாகன லைசன்ஸ் பெற்றவர்கள் மற்றும் இனிவரும் காலங்களில் கிளாஸ் 3 மற்றும் 3A லைசென்ஸ் பெற உள்ளவர்கள், ஏற்கனவே 2500 கிலோ வரை எடை கொண்ட வாகனங்களை ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அது Upgrade செய்யப்பட்டு அவர்கள் 3000 கிலோ எடை கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை ஓட்ட அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இந்த லைசன்ஸ் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடுத்த கட்ட பணிகள் கிடைக்கவும் பெரிய அளவில் வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும் அந்த 3000 கிலோ எடை என்பது அந்த எலக்ட்ரிக் வாகனத்தில் சரக்குகள் ஏற்றப்படுவதற்கு முன்னதாக உள்ள அதனுடைய எடை என்பதால் பலருக்கும் இது சிறந்த ஒரு விஷயமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
சிங்கை டிராபிக் போலீஸ் கொடுத்த விளக்கம்
2,501 கிலோ முதல் 3,000 கிலோ வரை எடை கொண்ட கீழே குறிப்பிட்டுள்ள நான்கு மாடல் வாகனங்களையும், கிளாஸ் 3 மற்றும் கிளாஸ் 3A உரிமதாரர்கள் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை கடந்த டிசம்பர் 12 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Higer H5C High Roof
Mercedes-Benz eSprinter 320
Ford F-150 Lightning
Joylong EA5
ஏன் இந்த 4 மாடல்?
சிங்கப்பூரில் உள்ள தொழில்துறை நிறுவனங்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த நான்கு வாகன மாதிரிகளும் அடையாளம் காணப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது, class 3 மற்றும் 3A உரிமம் பெற்றவர்கள் 2,500 கிலோ வரை மொத்த எடை கொண்ட இலகுரக சரக்கு வாகனங்களையும், சிறிய பேருந்துகளையும் இயக்கலாம். இந்த எடைக்கு மேற்பட்ட வாகனங்களை இயக்குபவர்கள் வகுப்பு 4 அல்லது வகுப்பு 4P ஓட்டுநர் உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த தகுதி எப்படி அமலாகும்?
ஏற்கனவே வகுப்பு 3 மற்றும் 3A உரிமம் பெற்றவர்கள் இந்த மாற்றத்திற்குத் தானாகவே தகுதி பெறுகிறார்கள், மேலும் அவர்களின் உரிமத்தில் எந்தவொரு கூடுதல் ஒப்புதல், புதுப்பித்தல் அல்லது மாற்றம் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார எல்ஜிவி-களும் மின்சாரச் சிறு பேருந்துகளும், அவற்றின் பேட்டரிகளின் எடை காரணமாக, வழக்கமாக அவற்றின் உள் எரிப்பு இயந்திர வகைகளை விட 400 கிலோ முதல் 500 கிலோ வரை அதிக எடை கொண்டவையாக இருக்கின்றன. இந்த பேட்டரிகள் பொதுவாக வாகனத்தின் தரைப்பகுதிக்கு அடியில் அமைந்திருக்கும்.
இது ஈர்ப்பு மையத்தை தாழ்வாக உருவாக்குகிறது மற்றும் வாகனத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது, ஆனால் ஸ்டீயரிங் மற்றும் திருப்ப ஆரம் போன்ற அடிப்படை சாலைக் கையாளுதல் பண்புகளையும், வீல்பேஸ் மற்றும் வாகன நீளம் போன்ற பரிமாணங்களையும் இது பாதிக்காது என்று டிபி கூறியது. ஒரு மின்சார வாகனத்தின் ULW-ஐச் சரிபார்க்க, வாகன உரிமையாளர்கள் அதன் பதிவு அட்டையையோ அல்லது ஒன்மோட்டரிங் இணையதளம் வழியாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பதிவு விவரங்களையோ சரிபார்க்கலாம்.