Select Page

சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் 14ம் தேதி “உலக புலம்பெயர்ந்தோர் தினம்” (Migrants Day) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மனிதவள அமைச்சகத்தின் அமைச்சர் டான் சீ லெங் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கிருந்த வெளிநாட்டு ஊழியர்களோடு கொண்டாடினார். ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களும், வெளிநாட்டு பணிப்பெண்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்காக உணவு மற்றும் விளையாட்டு போன்ற பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த நிகழ்வில் வெளிநாட்டு ஊழியர்களின் உடல் நலம் கருதி இரு முக்கிய விஷயங்கள் அறிவிக்கப்பட்டது.

A billion-dollar plan… Good news for foreign workers in Singapore… But..!

PCP – Primary Care Plan

2022-ல் தொடங்கப்பட்ட இந்த PCP திட்டமானது, வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஒரு நிலையான வருடாந்திர கட்டணத்தில், கடுமையான அல்லது நாள்பட்ட நோய்களுக்கான நேரடி மற்றும் தொலைமருத்துவ ஆலோசனைகள், எளிதில் அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையிலான மருத்துவ சேவையை வழங்குகிறது. வெளிநாட்டு ஊழியர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு (Dormitory) அருகில் உள்ள ஒரு மருத்துவ சேவை வழங்குநரிடம் சிகிச்சை பெறவும் இந்த திட்டம் உதவும்.

அதுமட்டுமல்ல, இந்த PCP மூலம் ஊழியர்களின் தங்குமிடங்களில் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவும் உதவும். தங்குமிடங்களில் வசிக்கும் அல்லது கட்டுமானம், கப்பல் கட்டும் தளம் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் பணி அனுமதி (Work Permit) மற்றும் எஸ் பாஸ் வைத்திருப்பவர்கள் முதன்மைப் பராமரிப்புத் திட்டத்தில் (PCP) பதிவு செய்துகொள்வது கட்டாயமாகும். Service அல்லது Production போன்ற பிற துறைகளில் உள்ள தொழிலாளர்களின் முதலாளிகளும் பணி அனுமதி மற்றும் எஸ் பாஸ் வைத்திருப்பவர்களை இந்த திட்டத்தில் பதிவு செய்யலாம்.

சரி இதில் என்ன புதிய அப்டேட்?

கடந்த டிசம்பர் 14ம் தேதி வெளியான தகவலின்படி, வெளிநாட்டு ஊழியர்களின் இந்த மருந்தாக அணுகலை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 2027ம் ஆண்டு முதல் இது முழு செயல்பாட்டிற்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரி இதை ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? இப்போது சிங்கையில் 6 இடங்களில் உள்ள இந்த மருந்தகங்கள் ஒருங்கிணைந்த 4 மருந்தகங்களாக செயல்படும். இதனால் நிச்சயம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும், அதே நேரம் அவர்களின் நிறுவன முதலாளிகள் மற்றும் மருந்தாக உரிமையாளர்களுக்கும் பிரச்சனை இருக்காது.

ஆனால் ஒரு சிறிய பிரச்சனை..

இதற்கு முன் சிங்கப்பூரில் இயங்கி வந்த இவ்வகை மருந்தகங்களில் நேரடியாக வந்து ஆலோசனை பெற்று செல்ல 5 வெள்ளியும், தொலை மருத்துவ ஆலோசனைகளுக்கு இரண்டு வெள்ளியும் வசூல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த டிசம்பர் 14ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின் கீழ் இனி நேரடியாக அல்லது தொலை மருத்துவ ஆலோசனை என்று எவ்வகை ஆலோசனை பெற்றாலும் அதற்கு ஐந்து வெள்ளி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு விஷயம் பல வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் சிறு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம். நமது தமிழ் சாகா வாசகர்கள் சிலர் கூட “ஏற்கனவே பெற்று வரும் குறைந்த சம்பளத்தில் இனி மருத்துவத்திற்கான ஆலோசனைக்கும் ஒரு தொகையை செலவிட நேரிடும்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களுக்கான இரு மகிழ்ச்சியான செய்திகள்..

இந்த PCP அணுக்களுக்கான பதிவு செயல்முறையை எளிதாக்குவதற்காக, மனிதவள அமைச்சகம் (MOM) ஒரு PCP பதிவு இணையதளத்தையும் உருவாக்க உள்ளது. இது நிறுவன முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களைப் பதிவு செய்வதையும், அவர்களின் திட்டங்களை நிர்வகிப்பதையும் எளிதாக்கும். இதன் நோக்கம், முதலாளிகளுக்கான நிர்வாகச் சுமையைக் குறைத்து, ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதாகும். அதே நேரம் ஊழியர்களுக்கும் தேவையற்ற கவலையை இது குறைக்கும். இரண்டாவதாக உடல்நலம் சரியில்லாத நேரத்தில் இந்த சேவையை மிக மிக விரைவாக தொழிலாளர்கள் அணுக இது உதவும்.

மேலும் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் பேசும்போது.. “எங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தரமான, மலிவு விலையில் மற்றும் எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். PCP-ஐ மேம்படுத்துவதன் மூலம், தொழிலாளர்கள் முதன்மைப் பராமரிப்புச் சேவைகளை அணுகுவதையும், பராமரிப்பின் தரத்தையும் மேலும் மேம்படுத்துவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்.

அதே நேரத்தில், முதலாளிகளுக்கான செலவுகளையும் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். இந்த மேம்பாடுகள் நமது சுகாதார அமைப்பின் மீள்தன்மையையும் மேம்படுத்தும், நமது பொது சுகாதார வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும், மேலும் எதிர்கால சுகாதார நெருக்கடிகளுக்கு நாம் சிறப்பாகத் தயாராக இருப்பதை உறுதி செய்யும்” என்று கூறினார்.