சிங்கப்பூரில் இணைய வழி தீங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இன்று ஜூன் 29ஆம் தேதி திங்கட்கிழமை முதல் OSC என்று அழைக்கப்படும் Online Safety Commission என்ற புதிய அரசு அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான உதவியை பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக இந்த ஆணையமானது ஐந்து வகையான இணையவழி தீங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நேரடியாக உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் பாலியல் துன்புறுத்தல் உட்பட, Doxxing எனப்படும் ஒருவருடைய தனிப்பட்ட விவரங்களை அனுமதியின்றி இன்டர்நெட்டில் பதிவேற்றுவது, Online Stalking எனப்படும் ஆன்லைனில் பின் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பது மற்றும் ஒரு தனி மனிதனின் அந்தரங்க புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவது மற்றும் குழந்தைகளை பாதிக்கும் ஆபாச படங்கள் என்று ஐந்து வடிவங்களில் பிரச்சனையை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவ இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் எதிர்வரும் காலங்களில் இந்த அமைப்பினுடைய செயல்பாட்டு வரம்பு என்பது தொடர்ச்சியாக விரிவுபடுத்தப்பட்டு, இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் ஆள் மாறாட்டம், போலியான தகவல்களை தவறாக வெளியிடுவது, ஒருவருடைய நற்பெயருக்கு அவதூறு விளைவிக்கும் செய்திகளை வெளியிடுவது உள்ளிட்ட 13 வகையான இணையவழி தீங்குகளை உள்ளடக்கி இந்த OSC செயல்படும் என்றும் நமது சிங்கப்பூரின் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் ஆகியவை இணைந்து வெளியிட்ட செய்தி குரூப்பில் தெரிவித்து இருக்கின்றன.
இணையத்தை பயன்படுத்தும் பொழுது மக்களவை சிறந்த முறையிலும், பாதுகாப்பான முறையிலும் அதை அவர்கள் பயன்படுத்த தனது முயற்சிகளை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதாக சிங்கப்பூர் தகவல் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டை பொருத்தவரை ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த OSC அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளையும் இன்று ஜூன் 29ஆம் தேதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன.
மேலும் இந்த அமைப்பு அமைக்கப்பட்டதன் மூலம் இணைவழி தீங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பிரத்தியகமாக அரசால் உருவாக்கப்பட்ட ஆணையத்தை கொண்ட உலகின் வெகு சில நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் மாறி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்த ஆணையத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆணையர் திரு. பிரான்சிஸ் பேசுகையில்.. “இணையத்தின் பரவலாக்கம் தான் தற்பொழுது ஆன்லைன் குற்றங்களுக்கான விதையாக மாறி இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை எங்களின் மையம் நோக்கமாக கொண்டிருக்கும்”.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு அது உதவும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கும் இதை சிங்கப்பூரிலிருந்து முற்றிலுமாக வேரறுக்கவும் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்” என்று கூறுயுள்ளார்.
