சிங்கப்பூரில் வணிக ரீதியாக தங்களுடைய தானியங்கி வாகனங்களை இயக்குவதற்கு முன்னதாக பூங்கோல் பகுதியில் ComfortDelGro நிறுவனம் மற்றும் Grab கிராப் நிறுவனங்கள் ஓட்டுநர் இல்லாத தானியங்கி வாகனங்களின் சோதனைகளை தற்பொழுது துரிதப்படுத்தி இருக்கிறது இதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.

Singapore Punggol – ComfortDelGro serves more than 1,500 passengers in an autonomous vehicle trial.

கடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் தங்களின் சோதனை திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 1500 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ComfortDelGro இந்த சேவையை வழங்கி உள்ளதாக நேற்று ஜூன் 12ஆம் தேதி அன்று நடைபெற்ற அந்த நிறுவனத்தின் ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக மக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இந்த தானியங்கி வாகனங்களில் இலவசமாக பயணித்து தங்களுடைய கருத்துக்களை அளிக்குமாறு அரசுக்கு கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ComfortDelGro நிறுவனம் தன்னுடைய முன்பதிவுகளை தொடங்குவதற்கு முன்பாக இந்த தானியங்கி நடுத்தர பேருந்து சேவைகளை பயன்படுத்தி பார்க்க சில பூங்கோல் குடியிருப்பாளர்களுக்கும் அங்குள்ள சில அடிமட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும் பொதுமக்களுக்கான முன்பதிவு எப்பொழுது தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அதேநேரம் இந்த தானியங்கி நடுத்தர பேருந்துகளில் கிராப் நிறுவனம் இதுவரை 5000-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவையை வழங்கியதுடன், சுமார் 60 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தானியங்கி ஓட்டுனர் வாகனத்தின் தூரத்தை பதிவு செய்துள்ளது என்றும் அதன் செய்தி தொடர்பாளர் நேற்று ஜூன் 12-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் கூறினார். மேலும் கிராப் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே இலவச சேவைகளை வழங்கி வருகிறது. அதேபோல ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இதுவரை கிராப் நிறுவனம் இலவச சேவைகளை தான் வழங்கி வருகிறது, கட்டண சேவை எப்பொழுது தொடங்கும் என்றும் அதற்கு முன்னதாக அதனுடைய செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும் குறித்து இன்னும் கிராப் நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால் 2026 ஆம் ஆண்டில் நடுப்பகுதி தொடங்கும் வேலையில் இந்த சேவைகள் கட்டண வடிவில் கொண்டுவரப்படும் என்றும், ஒரு பயணிக்கு நான்கு வெள்ளி என்கின்ற நிலையான கட்டணத்தை வசூலிக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

சீனாவை தளமாகக் கொண்ட தானியங்கி வாகன தயாரிப்பு நிறுவனமான Poni.ai நிறுவனத்தின் வாகனங்களை தற்பொழுது வாங்கியிருக்கும் ComfortDelGro, புங்கோலில் உள்ள மூன்று தானியங்கி வாகன வழித்தடங்களில் ஒன்றை தற்போது இயக்க இருக்கிறது. இது ஐந்து இருக்கைகள் கொண்ட நடுத்தர பேருந்துகளாக இருக்கும். மேலும் அவை வடகிழக்கு பூங்கோலில், Punggol Plaza, One Punggol, Punggol Coast Bus Interchange மற்றும் Oasis Terraces உள்ளிட்ட ஏழு நிறுத்தங்களை கொண்ட 12 கிலோமீட்டர் கொண்ட வழித்தடமாக இது இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு காரணங்களை கருதி வாகனங்களை உள்ளிருந்து தேவைப்படும் நேரத்தில் கட்டுப்படுத்துவதற்காக ஒரு பாதுகாப்பு பணியாளரும் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.