மருத்துவத்துறையில் பலருக்கும் தேவைப்படும் புதிய பல கண்டுபிடிப்புகளை நமது சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது மனித உடலில் ஒட்டிக் கொள்ளக்கூடிய வகையில் குறிப்பாக பேட்டரி இல்லாமலேயே செயல்படும் ஒரு புதிய வகை “ஸ்கின் பேட்ச்” முன்மாதிரியை நமது உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது உருவாக்கி இருக்கின்றனர். இதன் மூலம் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு 24 மணி நேரமும் தொடர்ச்சியாக அவருடைய ரத்த அழுத்தத்தை கண்காணிக்க முடியும்.
“Magic sticker is here – A new breakthrough in healthcare” – Singapore NUS achieves a remarkable innovation.
இதய ஆரோக்கியத்தை நோக்கிய கண்காணிப்பில் இந்த தொழில்நுட்பம் ஒரு மிகப்பெரிய மையில்க்களாக பார்க்கப்படுகிறது. பொதுவாக மனிதனின் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க தேவைப்படும் “CUFF” எனப்படும் கைகளில் கட்டப்படும் அந்த பெல்ட் போன்ற கருவி பயன்படுத்தப்படும். ஆனால் அதை பயன்படுத்தபொழுது ஓரிடத்தில் நாம் அசையாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்க வேண்டும். ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பின்படி எந்தவித சிரமமும் இல்லாமல் அந்த “ஸ்கின் பேச்சின்” பேட்டரியை கூட ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் நமது ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடலின் பல முக்கிய மாற்றங்களை கண்டறிய முடியும்.
தூக்கத்திலும் கண்காணிக்கலாம்
இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் ஒருவர் ஆழ்ந்து தூங்கும் நேரத்திலும் நம்மால் அவருடைய ரத்த அழுத்தத்தை கண்டறிய முடியும். காரணம் ஒருவர் தூங்கும் நேரத்திலும் காலையில் அவர் தூங்கி எழும் நேரத்திலும் அவருடைய இரத்தத்தை அழுத்தத்தை தொடர்ச்சியாக கண்காணிப்பது என்பது மருத்துவ ரீதியாக மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. நமது சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் கணினி பொறியியல் துறை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Selman Kurt மற்றும் அவருடைய குழுவினர் தான் தற்பொழுது இதில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தற்போது உள்ள இந்த “CUFF” போன்ற மாடல்கள் மிக மிக துல்லியமான முடிவுகளை தான் கொடுக்கும் என்றாலும், நோயாளி ஓரிடத்தில் அசையாமல் இருக்கும் பொழுது தான் இவை 100% சரியாக வேலை செய்யும். ஆனால் இந்த ஸ்டிக்கர் போன்ற அமைப்பு உடலில் ஓட்டப்படும் பொழுது அது நோயாளியின் உடலில் ஒட்டப்பட்டு இருக்கும் வரை அவருடைய இரத்த அழுத்தத்தையும் பிற முக்கிய தகவல்களையும் சீராக 100% சரியாக கணிப்பதோடு அவற்றினுடைய பேட்டரியையும் நீங்கள் அடிக்கடியை சார்ஜ் செய்ய வேண்டியதில்லை என்பதால் அது மிகவும் பயனுள்ள ஒன்றாகவும் மாறுகிறது.
சரி இது எப்படி வேலை செய்கிறது?
இந்த ஸ்கின் பேட்ச் முறையானது கடந்த 2021 ஆம் ஆண்டு நமது தேசிய பல்கலைக்கழக வயர்லெஸ் பயோ எலக்ட்ரானிக்ஸ் குழுவினால் தொடங்கப்பட்டது. இதில் அரிசோனா பல்கலைக்கழகம் மற்றும் சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து பணியாற்றினர். பொதுவாக இதயம் சுருங்கி உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தை செலுத்தும் போது சில மின் சமிங்கைகள் ஏற்படுகிறது. அந்த மின்சமிங்கைகளை இந்த ஸ்டிக்கர் கண்டறிகிறது. அப்போது மணிக்கட்டில் ஏற்படும் ரத்த ஓட்டத்தின் அளவை இது கணக்கிடும்.
மேலும் இதயத்தில் இருந்து அந்த ரத்தம் மணிக்கட்டுக்கு சென்றடையும் நேரத்தை வைத்து ரத்த அழுத்தத்திற்கான நேர்மறை விகிதத்தில் அதை கணக்கிடும். உதாரணமாக ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் ரத்த ஓட்டம் மணிக்கட்டையை சென்றடைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்று Kurt விலக்கியுள்ளார். மேலும் இது ஒரு நோயாளிக்கு பொருத்தப்படும் பொழுது அவர் உடலில் அசைவுகள் ஏற்பட்டால் அந்த பேட்டரி போன்ற கனமான பொருட்களால் சென்சார் அளவீடு குறை கூடும் என்பதால் இதில் பேட்டரியே இல்லாமல் வடிவமைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
