சிங்கப்பூரில் பண மோசடி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஒரு வெளிநாட்டு சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே மலேசியாவில் இருந்து வரும் நபர்கள், சிங்கையின் அரசு அதிகாரிகளை போல நடித்து குற்ற செயல்களில் ஈடுபடுவது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த ஒரு 15 வயது சிறுவன் போலீசாரின் விசாரணை வலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“Easy to get Singapore PR” – Fake agents on the loose; 15-year-old arrested; public warned.
சிங்கப்பூரில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் இங்குள்ள அரசு அதிகாரிகளை போல நடித்து மக்களை ஏமாற்றி மனம் பறித்ததாகவும், அல்லது பணம் பறிக்க முயன்றதாகவும் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். அவர்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் குறைந்தது 9,500 வெள்ளி மதிப்பிலான ஒரு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் தற்பொழுது 15 வயதுடைய மலேசிய சிறுவன் ஒருவன் இன்று ஏப்ரல் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட உள்ளான். சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பான மோசடி புகாரை பெற்ற பிறகு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் நிரந்தர குடியுரிமை மோசடி
கடந்த சில நாட்களாகவே சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமை பெற்று தருவதாக கூறி இங்குள்ள வெளிநாட்டவர்கள் பெரிய அளவில் ஏமாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ஒரு மலேசிய தம்பதியினர், இதே போன்ற ஒரு நிரந்தர குடியுரிமை மோசடியில் சிக்கி கிட்டத்தட்ட 80,000 வெள்ளி வரை இழந்தது குறிப்பிடத்தக்கது. முதலில் முகநூலில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அவர்கள் PR-க்கு விண்ணப்பிக் அவர்களை தொடர்புகொண்ட ஒரு நபர் சிறுக சிறுக பணத்தை அவர்களிடம் இருந்து பெற்றுள்ளார். பின் வெகு நாட்கள் ஆகியும் தங்களுக்கு PR சான்றிதழ் வராதது குறித்து காவல்நிலையம் சென்றபோது தான் அவர்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு தெரியவந்தது. அந்த வழக்கில் தற்பொழுது சிங்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் மேலும் இருவர் இதே போல நிரந்தர குடியுரிமை மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்து இருக்கின்றனர். அவர்கள் முறையே 7,500 மற்றும் 2,200 வெள்ளி பணத்தை தெரியாத ஒரு நபரிடம் ஒப்படைத்ததாகவும் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் அவர்களுடைய விண்ணப்பங்களை சரிபார்த்த நேரத்தில் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பது தங்களுக்கு தெரிய வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி கும்பலுக்கு வழங்கிய விதத்தில் தான் அந்த 15 வயது மலேசியா சிறுவன் இப்போது கைதாகியுள்ளான். மேலும் இதுபோன்ற இரு பல குற்றங்களில் அவனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
குற்ற பின்னணி உள்ள பிறருக்கு உதவிய குற்றத்திற்காக அந்த சிறுவன் மீது தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற வழக்குகள் என்னென்ன அவன் மேல் இருக்கின்றது என்பதையும் போலீசார் சோதிக்க தொடங்கி உள்ளனர். சிங்கப்பூரில் அண்மையில் அமலான புதிய சட்டங்களின்படி மோசடி கும்பல்களை நடத்துவது, அல்லது மோசடி கும்பல்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்வது, தங்களுடைய வங்கி மற்றும் சிம் கார்டு விவரங்களை மோசடி கும்பல்களுக்கு கொடுப்பது போன்ற குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 6ல் இருந்து 24 பிரம்படிகள் வரை தண்டனை வழங்கப்படும் என்று சிங்கை அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.