சிங்கப்பூரில் கடந்த 2025ம் ஆண்டை ஒப்பிடும் பொழுது இந்த 2026ம் ஆண்டு முதல் காலாண்டிலேயே போக்குவரத்து சம்பந்தமான விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக நமது சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது. பெரும்பாலும் விதிகளை மீறுவது மற்றும் அதிவேகமாக செல்வதுதான் இந்த விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றது LTA. இந்நிலையில் சிங்கப்பூர் சாலைகளில் அதிவேகமாக செயல்பட்ட 12 வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது சிங்கப்பூர் அரசு அது குறித்து இந்த பதிவில் காணலாம்..
“No more stunts on Singapore roads! 12 caught… Traffic police take strict action.”
ஏற்கனவே சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் கனரக வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும் என்று டிராபிக் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் அதை செய்ய தவறும் கனரக வாகன உரிமையாளர்களுக்கு 10 மடங்காக முன்பு வசூலிக்கப்பட்டதிலிருந்து கூடுதலாக அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிவேகமாக வாகனங்களை செலுத்தியது மற்றும் வேலை கட்டுப்பாட்டு கருவிகள் இல்லாமல் வாகனம் ஓட்டியது என்கின்ற குற்றங்களில் கீழ் 12 வாகன ஓட்டிகள் மீது நாளை ஏப்ரல் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட உள்ளது. அந்த 12 பேரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இன்று ஏப்ரல் 27ஆம் தேதி நமது சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் 34 முதல் 70 வயதுக்கு உட்பட்ட அந்த 12 நபர்களும் கடந்த 2025 டிசம்பர் முதல் இந்த 2026 பிப்ரவரி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் ஏதோ ஒரு வகையில் தவறு செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளியான ஒரு முழுமையான அறிக்கையில் இரு வேறு தனித்தனி சம்பவங்களின் போது 61 மற்றும் 53 வயது உடைய இரு முதியவர்கள் சுமார் 70 கிலோ மீட்டருக்கு மேல் வேகத்தில் வாகனத்தை இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் பேருந்துகளை இயக்குபவர்கள் என்பதால் பேருந்துகளுக்கான சிங்கப்பூரின் வேகவாரம்பான 60 கிலோ மீட்டர் வேகத்தை அவர்கள் மீறியது தெரிய வந்திருக்கிறது. அதேபோல கடந்த ஜனவரி 15ஆம் தேதி Halus Link சாலையில் ஒரு சிமெண்ட் மிக்சர் வாகனத்தை ஓட்டி சென்ற 52 வயது நபரும் இந்த தணிக்கை நடவடிக்கையில் பிடிபட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 57 கிலோமீட்டர் வேகத்தில் அவர் அந்த வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரில் உள்ள வேக வரம்புபடி அவர் அந்த வாகனத்தை 40 கிலோ மீட்டர் என்கின்ற வேகத்திலேயே மட்டுமே செலுத்தி இருக்க வேண்டும். அதேபோல பிப்ரவரி 8ம் தேதி ஸ்ரேயஸ் ஷியர்ஸ் அவன்யூவில் பிரைம் மூவர் எனப்படும் ஒரு கனரக வாகனத்தை கிட்டத்தட்ட 72 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி ஒரு 54 வயது நபர் சிக்கி இருக்கிறார்.
இது குறிப்பிட்ட வேகவரம்பைவிட 20 கிலோமீட்டர் அதிகமானது என்றும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். சிங்கப்பூரில் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலானவை மரணத்தை ஏற்படுத்துகிறது என்பதும், இதற்கு முழுக்க முழுக்க ஓட்டுநர்களின் கவன சிதைவும், அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு விதி மீறல்களும் தான் காரணமாக மாறுகிறது என்கிறது நிலப் போக்குவரத்து ஆணையம். அதேபோல சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட புதிய வாகன சட்டத்தின் கீழ் 12 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட கனரக வாகனங்களில் கண்டிப்பாக வேலை கட்டுப்பாடு கருவி கொடுத்திருக்க பட வேண்டும் அதை பொறுத்தாத வாகன உரிமையாளர்களுக்கு பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 1ம் தேதி முதல் 3051 முதல் 12,000 கிலோ வரையிலான எடைகொண்ட லாரிகளுக்கு அந்த வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவதும் கட்டாயமாக இருக்கிறது. இதனை மீறுபவர்களுக்கும் சிறை தண்டனை, லாரி உரிமம் ரத்து, 10 மடங்கு அதிக அபராதம் என்று குற்றத்திற்கு ஏற்றார் போல தண்டனையும் விதிக்கப்படலாம்.