வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மறுசுழற்சிக்கு தகுதியான கேன்கள் மற்றும் பாட்டில்களை டெபாசிட் செய்த பிறகு, குடியிருப்பாளர்கள் தங்கள் DBS PayLah Wallet மூலம் 10-சென்ட் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது Cool Drinks பாட்டில்களை டெபாசிட் செய்து அதற்கான பணத்தை திரும்பப்பெற உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது டிஜிட்டல் முறையாகும். ஏற்கனவே பாட்டில்களை டெபாசிட் செய்யும்போது ez-link அட்டை மூலம் இதே 10 சென்ட் பணத்தை திரும்பப்பெறும் முறை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மறுசுழற்சி திட்டத்தின்படி, குடியிருப்பாளர்கள் தங்கள் பயன்படுத்திய Cool Drink மற்றும் இதர தகுதியுள்ள பாட்டில்களை தீவு முழுவதும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட விற்பனை இயந்திரங்களில் டெபாசிட் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
From April in Singapore – Public to receive 10 cents for recycling bottles.
இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது?
இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 150 மில்லி முதல் 3 லிட்டர் வரையிலான பாட்டில் மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்ட பானங்களை வாங்கும்போது கூடுதலாக 10 காசுகள், அதாவது திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையை (டெபாசிட்) செலுத்துவார்கள். மேலும் அதை திரும்ப பெற வாங்கிய பாட்டில்களை மீண்டும் அந்த இயந்திரங்களில் போடும்போது அதை PayLa வழியாக திரும்பபெறலாம். இதற்கு PayLa செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும், பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட QR குறியீட்டை அந்த செயலியில் “எனது QR”-ன் கீழ் உருவாக்கி, அதை இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று DBS வங்கி இன்று மார்ச் 2 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. PayLah சிங்கப்பூரில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இது செயல்படும்.
மேலும் பொதுமக்கள் DBS அல்லது POSB வங்கிக் கணக்கு இல்லாமலே இந்த பயன்பாட்டிற்கு பதிவு செய்யலாம் என்று வங்கி மேலும் கூறியுள்ளது. பாட்டில்கள் மற்றும் கேன்களைத் திருப்பி அனுப்பியதும், பணத்தைத் திரும்பப் பெறும் தொகை குடியிருப்பாளர்களின் PayLah Wallet-ல் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பும் வங்கியால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகள், HDBயில் உள்ள வெற்றிட தளங்கள் மற்றும் நகர மையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாட்டில்களை கொடுக்கும் விற்பனை இயந்திரங்கள் வைக்கப்படும். தற்போது அந்த இயந்திரங்கள் 10 சென்டை நாணயங்களாக வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. மேலும் பணத்தைத் திரும்பப் பெறும் முறைகள் டிஜிட்டல் முறையில் இருக்கும் என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் துறை மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி பிப்ரவரியில் தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார்.
குடியிருப்பாளர்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், தங்கள் 10-சென்ட் வைப்புத்தொகையை டிஜிட்டல் முறையில் மீட்டெடுக்க உதவுவதற்காக சமூக நல பணியாளர்கள் களத்தில் இருப்பார்கள். DBS-ன் நுகர்வோர் வங்கிக் குழுமத்தின் பணம் செலுத்துதல் மற்றும் பாதுகாப்பற்ற கடன் வழங்கல் துறைத் தலைவர் திருமதி சான் சோவ் ஹான், DBS PayLah என்பது சிங்கப்பூரின் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொபைல் வாலட் என்றும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை அது கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இருப்பினும், PayNow நிதி பரிமாற்ற தளத்தில் 2022ம் ஆண்டு நிலவரப்படி 5.5 மில்லியன் வங்கிக் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். ஆகவே மக்கள் பயமின்றி அதை பயன்படுத்த அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
சோதனை முறையில் நடக்கும் முயற்சி..
இந்த பாட்டில் டெபாசிட் முறையை அமல்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பே சிங்கை முடிவு செய்திருந்தாலும் அதை இப்போது தான் செயல்படுகிறது. மக்கள் மற்றும் விற்பனையாளர்களை இது எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருக்க பல ஆய்வுகள் நடத்தப்பட்டு, இப்போது இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. நெகிழி குப்பைகளை சீராக கையாள இது ஒரு சிறந்த முடிவாக இந்த முறை பார்க்கப்படுகிறது. குளிர்பான மற்றும் பிற பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கும்போது அதன் விலையைவிட 10 சென்ட் கூடுதலாக வசூலித்து, பின் அந்த பாட்டில்களை திருப்பிச்செலுத்தி அந்த 10 சென்ட் பணத்தை மக்கள் திரும்ப பெறுவதே இந்த திட்டம்.