மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் காரணமாக சிக்கித் தவிக்கும் சிங்கப்பூரர்களை வெளியேற்றுவதற்காக நமது சிங்கப்பூர் குடியரசின் விமானப்படை (RSAF) அனுப்பிய A330 விமானம், சவுதி அரேபியாவின் ரியாத்திற்கு இன்று புறப்பட்டது. இன்று மார்ச் 10ம் தேதி அதிகாலையில் சாங்கி விமான தளத்திலிருந்து அந்த MRTT புறப்பட்டதாக பாதுகாப்பு மூத்த துணை அமைச்சர் ஜாக்கி முகமது தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். “சாத்தியமான போக்குவரத்து வசதி அங்கு இல்லாத காரணத்தால் இப்போது, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், பல சிங்கப்பூரர்கள் சிங்கப்பூருக்குத் திரும்புவதற்கு உதவி கோரியுள்ளனர் என்றும், அதனால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். “சிங்கப்பூர் அரசாங்கம் அவர்களை வீட்டிற்கு அழைத்து வர MRTT-ஐ அனுப்பியுள்ளது. இது ஒரு முக்கியமான பணி, அனைவரும் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்றார் அவர்.

“We won’t charge passengers” – Singapore’s RSAF departs for Riyadh to protect and evacuate its citizens.

ஒவ்வொரு விமான நிறுவனமும் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் தேவைகளைப் பொறுத்து சுமார் 266 பணியாளர்களை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் இந்த மீட்பு பணியில் அதில் பயணிகளிடம் விமான கட்டணம் வசூல் செய்யப்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த விமானப் பயணம் முதன்முதலில் மார்ச் 9 அன்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் கான் சியோ ஹுவாங் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள் தாயகம் திரும்புவதில் ஆர்வம் காட்டியுள்ளதாக அவர் கூறினார். மதிய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழலில், அங்குள்ள சிங்கப்பூரர்கள் பலர் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் என்று தூதரகங்களிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் SIA மற்றும் பிற விமானங்கள் மூலம் சிங்கை அழைத்துவரப்பட்டவர்களிடம் குறைந்த அளவிலான கட்டணமே வசூல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

போர் பதற்றம் சற்று குறைந்திருக்கிறது என்றாலும் கூட மத்திய கிழக்கில் உள்ள பல விமான நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பது அங்குள்ள பிற நாட்டவர்களை மீட்பதில் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிக குறைந்த அளவிலான விமானங்கள் உலக அளவில் இயக்கப்பட்டு வந்தாலும் அவ்வப்போது விண்ணில் தென்படும் ஏவுகணைகளால் விமான சேவை நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானங்களை இயக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மார்ச் மாத இறுதிக்குள் நிலைமை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தொடர்ச்சியாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதும் விமான நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதும் அங்குள்ள பிற நாட்டு மக்களுக்கு மன ரீதியாக பெரிய அளவில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் நான் கட்டணம் எதுவுமே வசூலிக்காமல் தற்பொழுது சவுதியின் ரியாத்தில் உள்ள நமது சிங்கப்பூரர்களை மீட்க நமது விமான படையின் முக்கிய விமானமே புறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மார்ச் 12ஆம் தேதி இரண்டாவது விமானம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆலோசனை நடந்து வருவதாகவும், சிங்கை விமானப்படை தெரிவித்திருக்கிறது முன்னதாக மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஓமனின் மஸ்கட் பகுதிக்கு சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அங்கிருந்த பல சிங்கப்பூர்களை மீண்டும் தாயகம் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இப்போது சவுதி அரேபியாவின் ரியாத்திற்கு நமது சிங்கப்பூர் விமான துறையின் விமானம் தனது பயணத்தை மேற்கொண்டு இருக்கிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பி வந்திருக்கின்றனர். தொடர்ச்சியாக அந்தந்த நாடுகளில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்கள் 24 மணி நேரமும் தங்களுடைய மக்களை தாயகம் அழைத்து வர தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.