மத்திய கிழக்கில் தற்பொழுது நிலவிவரும் போர் பதட்டம் காரணமாகவும் புவிசார் அரசியல் சூழல் காரணமாகவும் பாதுகாப்பு காரணங்கள் கருதி நமது சிங்கப்பூரின் தேசிய விமான சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்கூட் தன்னுடைய முக்கியமான சில சேவைகளை வருகின்ற மார்ச் 17ஆம் தேதி வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறது. ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வருகின்ற மார்ச் 15ஆம் தேதி வரை துபாய்க்கு செல்லும் தன்னுடைய இரண்டு விமானங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள நிலையில் தற்பொழுது விமான எண்TR 596 மற்றும் TR 597 ஆகிய இரண்டு விமானங்களையும் வருகின்ற மார்ச் மாதம் 17ஆம் தேதி வரை நிறுத்துவதாக இப்போது ஸ்கூட் அறிவித்திருக்கிறது.
“Ongoing war tension” – Singapore’s Scoot services cancelled until the 17th
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தொடங்கிய இந்த தடை, முதலில் மார்ச் 7 வரை அமலில் இருந்தது. அதற்கு பிறகும் மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் பதட்டம் நிலவிய நிலையில் அது 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ள ஸ்கூட் நிறுவனம் ஜெட்டா பகுதிக்கு பயணம் செய்ய ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் அந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து முழுமையாக ரீஃபண்ட் பெறலாம் என்று கூறி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ரத்து செய்ய அவசியம் இல்லாத பயணிகள் ரீ புக்கிங் முறை மூலம் மாற்று தேதிகளுக்கு அந்த டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஸ்கூட் அறிவித்திருக்கிறது.
நேரடியாக விமான நிலையத்திற்கு வந்து முன்பதிவு செய்த பயணிகள் மின்னஞ்சல் மூலம் ரீபண்ட் கோரலாம் என்றும், பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்தவர்கள் சம்பந்தப்பட்ட முகவர்களை உடனே தொடர்பு கொண்டு ரீபண்ட் பெறலாம் என்றும், ஸ்கூட் இணையதளம் மூலம் டிக்கெட் புக் செய்தவர்கள் Manage My Booking என்ற லிங்க் மூலம் தங்களுக்கான சேவையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் ஆகிய நிறுவனங்களும் ஜடா மட்டும் இல்லாமல் துபாய் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு தங்களுடைய சேவையை தற்பொழுது நிறுத்தி வைத்திருக்கிறது.
மேலும் அங்கு சிக்கியுள்ள நமது சிங்கப்பூர்வர்களை மீட்க சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ச்சியாக பல விமானங்களை அனுப்பி அவர்களை மீட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்று மார்ச் 10 ஆம் தேதி கூட சவுதியின் ரியாத் பகுதியில் சிக்கியிருக்கும் நமது சிங்கை மக்களை மீட்டு வருவதற்காக நமது விமானப்படையின் முக்கிய விமானம் ஒன்றை அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.