அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி துவங்கிய நிலையில், உலக அளவில் எரிபொருள் பிரச்சனையானது துவங்கியது. எரிபொருளை ஈரானிலிருந்து உலகின் பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கும் ஹார்மோஸ் நீர்நிலை அவ்வப்போது மூடப்பட்டு பின் திறக்கப்படுவதால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதற்கு சிங்கப்பூரும் விதிவிலக்கு அல்ல.

“Even after peace returned to the Middle East, things haven’t improved” – Shocking news awaits Singaporeans in July.

ஆனால் தற்பொழுது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி பேச்சு வார்த்தை ஒரு ஒப்பந்தமாக எட்டப்பட்டுள்ள நிலையில், விரைவில் எரிபொருள் பிரச்சனைகள் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான முக்கிய கடல் வழியை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் சேதங்களால் வரவிருக்கும் மாதங்களிலும் அதனுடைய தாக்கம் பிரதிபலிக்கும் என்று சிங்கப்பூர் EMA தெரிவித்திருக்கிறது.

இதன் மூலம் வருகின்ற ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சார கட்டணங்கள் 20 முதல் 30% உயர வாய்ப்புகள் இருக்கிறது. ஈரான் நாட்டு போரின் காரணமாக ஏற்பட்ட எரிசக்தி செலவுகள் காரணமாக வருகின்ற ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிதியாண்டிற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வு குறித்த சில தகவல்களை நேற்று ஜூன் 18ஆம் தேதி EMA வெளியிட்டது. அதில் அதிகபட்சமாக மின்சார கட்டணங்கள் 30 சதவீதம் வரை உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஜிஎஸ்டி உட்பட ஒரு kWh- க்கு 29.72 காசுகள் என்ற அளவில் உள்ளது மின்சார கட்டணம். ஒவ்வொரு காலண்டிற்கும் இது மாற்றி அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 60% குடும்பங்களுக்கு இந்த ஒழுங்கு படுத்தப்பட்ட முறையில் தங்களது மின்சார கட்டணங்களை செலுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த அளவானது வருகின்ற ஜூலை மாத வாக்கில் 20 முதல் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 30 சதவீதம் வரை உயிரை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

S&P குளோபல் நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் அமன்டா காங் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் பேசுகையில் சிங்கப்பூரில் தோராயமாக நான்கு அறைகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வசிப்போருக்கான மாதாந்திர மின்சார கட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 30 டாலர் வரை உயர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது 4 அறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சராசரியாக மாதாந்திர கட்டணம் சுமார் 88 டாலர் வரை உயரும் என்று அமண்டா தெரிவித்திருக்கிறார்.

இது திடீர் மாற்றம் அல்ல என்றும் இவை ஏற்கனவே கணிக்கப்பட்ட உயர்வு தான் என்றும் இந்த மின்சார கட்டணத்தின் பெரும் பகுதி எரிசக்தி செலவுகளைக் கொண்டே கணக்கிடுகிறப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பேசிய EMA செய்தியை தொடர்பாளர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மோதல் உலக அளவில் எரிபொருள் விநியோக சங்கிலியை பாதித்திருக்கிறது. கிட்டத்தட்ட பிப்ரவரி மாதம் முதல் இந்த ஜூன் மாதம் வரை எரிவாயுவின் விலை மிக மிகக் கடுமையாக உயர்ந்ததை நாம் அனைவரும் பார்த்தோம். இதன் விளைவாகத்தான் வரவிருக்கும் காலாண்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட மின்சார கட்டணம் கணிசமாக உயர்கிறது என்று அவர் கூறினார்.