சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கையின்படி லண்டன் மற்றும் மெல்போன் நகரங்களுக்கான தன்னுடைய விமான சேவையை முன்பு இருந்ததை விட இப்போது அதிகரிப்பதாக தெரிவித்திருக்கிறது. அதே சமயம் மத்திய கிழக்கில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வரும் போர் பதற்றம் காரணம் துபாய்க்கு தன்னுடைய சேவைகளை ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் வரை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. இது குறித்து கூடுதல் தகவல்களை இப்பொழுது காணலாம்.
Cancellations extended till April 30 – Air passengers worried after SIA announcement.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று மார்ச் 20ஆம் தேதி சில முக்கியமான அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி சிங்கப்பூர் மற்றும் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்திற்கு இடையே முன்பு இருந்ததை விட கூடுதலாக சில விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி SQ314 மற்றும் SQ313 என்று இரு கூடுதல் சேவைகள் வருகின்ற மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் ஜூலை மாதம் இரண்டாம் தேதி வரையிலும், மீண்டும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரையிலும் ஒரு வாரத்திற்கு மூன்று விமானங்கள் என்ற முறையில் இயக்கப்பட உள்ளது. அதேபோல தேவைகள் அதிகமாக இருக்கும் கோடை விடுமுறை நாட்களில், அதாவது ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 29 வரை இந்த சேவை வாரத்திற்கு மூன்று நாட்களில் மட்டும் இல்லாமல் தினசரி அடிப்படையில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லண்டனின் ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு ஆறு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சிங்கப்பூரில் இருந்து மெல்போன் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் கொள்ளளவும் தற்பொழுது அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மெல்போன் செல்கின்ற பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 24 வரை அந்த வழித்தடத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தன்னுடைய அளவில் பெரிய விமானங்களை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது. தற்பொழுது அந்த வழித்தடத்தில் பயன்படுத்தப்படும் போயின் 777-300ER (264 இருக்கைகள்) விமானங்களுக்கு பதிலாக ஏர்பஸ் A380 (471 இருக்கைகள்) விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம் சிங்கை உங்கள் வழிதடத்தில் அதிக அளவிலான பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.
துபாய் நாட்டுக்கு நீட்டிக்கப்படும் தடை..!
மத்திய கிழக்கில் தொடர்ந்து மிகப் பெரிய அளவில் போர் பதட்டம் நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தொடங்கிய இந்த பிரச்சனை கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களை கடந்து செல்வது உலக அளவில் மிகப்பெரிய பதட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது விமான சேவைகளையும் பெரிய அளவில் பாதித்திருக்கிறது அந்த வகையில் துபாய் நாட்டில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக சிங்கை மற்றும் துபாய் இடையிலான SQ494 மற்றும் SQ495 விமான சேவைகள் ஏப்ரல் 30 வரை ரத்து செய்யப்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்திருக்கிறது. முன்னதாக இந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி வரை மட்டுமே இந்த ரத்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், துபாயில் நிலைமை சீரடையாததால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை இந்த ரத்து நீட்டிக்கப்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்திருக்கிறது. டிக்கெட் முன்பதிவு செய்து பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு விமானங்களில் மாற்றப்படுவார்கள் அல்லது டிக்கெட் கட்டணம் அவர்களுக்கு முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்றும் விமான நிலையம் உறுதி அளித்திருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஸ்கூட், சிங்கப்பூர் மற்றும் ஜெட்டா இடையிலான விமான சேவைகளை வருகின்ற மார்ச் மாதம் 28ஆம் தேதி வரை ரத்து செய்திருக்கிறது.