சிங்கப்பூரில் எதிர்வரும் காலத்தில் தீ விபத்துகளின் போது விரைவாக செயல்படவும், தப்பி ஓடும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் புதிய முறையை கையாள சிங்கப்பூர் காவல்துறை தற்பொழுது தயாராகி வருகிறது இதுகுறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

எதிர்வரும் காலத்தில் சிங்கப்பூர் இன்னும் சிறப்பான நாடாக மாற மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்களை தடுக்கவும் சிங்கப்பூர் போலீசார் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், தீ விபத்து ஏற்படும் சமயத்தில் அதனை விரைந்து சரி செய்யவும் ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் நமது சிங்கப்பூர் முழுவதும் பிரத்தியேகமாக அமைக்கப்படும் பெட்டிகளில் (Drone Boxes) வைக்கப்படும். தேவைப்படும் நேரங்களில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவையான இடத்தில் உள்ள ட்ரோனை அதிகாரிகள் பயன்படுத்த முடியும். இந்த ட்ரோன் பாக்ஸ் அமைப்புகள் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை சயின்ஸ் எக்ஸ்போ மற்றும் கன்வெக்ஷனல் சென்ட்ரில் நடைபெற உள்ளது தொழில்நுட்ப காட்சிப்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

சரி இதனால் என்ன பயன்?

ஏற்கனவே சிங்கப்பூரில் ட்ரோன் பயன்பாடு என்பது செயல்பாட்டில் தான் இருந்து வருகிறது. என்றாலும் இந்த புதிய முறை எதற்கு என்கின்ற கேள்வி நமக்குள் எழலாம்?. அதற்கு பதில் அளிக்கும் விதமாக சிங்கப்பூர் போலீஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்பொழுது ஒரு ட்ரோனை நிலைநிறுத்த நமக்கு சுமார் ஒரு மணி நேரமாவது தேவைப்படும். ஆனால் இந்த புதிய அமைப்பின் மூலம் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் செல்வதற்கு முன்பதாகவே, அல்லது தீயணைப்பு வீரர்கள் செல்வதற்கு முன்பவகே இந்த 40 கிலோ எடை உள்ள ட்ரோன்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு செல்லும். இதை நிலை நிறுத்த என்று தனியான நேரம் ஒன்று தேவைப்படாது.

மேலும் இந்த ட்ரோன்கள் அனைத்துமே 5g வசதியுடன் அதை சுற்றி மூன்று இடங்களில் கேமரா இடம்பெற்றிருக்கும். மேலும் இது சாதாரண ட்ரோன்கள் போல அல்லாமல் தொலைதூரத்தில் இருந்து இதை இயக்கும் வசதி உள்ளதால் கட்டாயம் ஏற்கனவே அமலில் இருக்கும் ட்ரோன்களை காட்டிலும் இது பல மடங்கு சிறந்ததானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வெறும் 350 கிராம் எடை கொண்ட சிறிய வகை ட்ரோன்களும் உருவாக்கப்படுகின்றன. இவை தெருக்களில் உள்ள மின் கம்பங்கள் அல்லது சுவர்களில் பொருத்தப்பட்டு இருக்கும். ஒருவேளை குற்றவாளி தப்பி சென்றாலோ அல்லது உழவு வேலை செய்ய வேண்டும் என்றாலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே காவலர்களால் இந்த ட்ரோன்கள் இயக்கப்படும்.

வெறும் 350 கிராம் எடை கொண்டது என்பதால் இவற்றால் எளிதாகவும் விரைவாகவும் குற்ற செயல் நடந்த இடத்திற்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கையை பொறுத்தவரை சில Peak நேரங்களில் சாலையில் கூட்ட நெரிசல் என்பது சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் அது போன்ற நேரங்களிலும், தீ விபத்து அதிகம் நடக்கும் என்று கணிக்கப்படும் நேரத்திலும் இந்த வகை ட்ரோன்-கள் அதிகாரிகளுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும்.