சிங்கப்பூரில் உள்ளூர் பேருந்து கேப்டன்களின் அளவை மேம்படுத்துவதற்காக அவர்களின் ஆரம்ப சம்பளத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக, போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியோவ் இன்று பிப்ரவரி 27 அன்று தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார். செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) அப்துல் முஹைமின் எழுப்பிய நாடாளுமன்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இதை அவர் தெரிவித்தார். பேருந்து கேப்டன் பதவிகளை மேலும் தொழில்முறைமயமாக்குவதற்கான போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், உள்ளூர் பேருந்து கேப்டன்களின் அளவை அதிகரிக்கவே இந்த முறை செயல்படுத்தப்படுகிறது என்றும், சிங்கப்பூரை பொறுத்தவரை வெறும் 28 சதவிகித பேருந்து கேப்டன்கள் மட்டுமே உள்ளூர் ஊழியர்கள் என்றும் அவர் கூறினார்.
“Steps will be taken to increase the basic salary,” explained a Singapore minister.
இளம் சிங்கப்பூரர்கள்.
அதே நேரம் இளம் சிங்கப்பூரர்கள் இந்தத் துறையில் சேர ஊக்குவிக்கும் அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்தும் தொழிலாளர் கட்சி எம்.பி. கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் “புதிய ஓட்டுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் தொடக்க சம்பளத்தையும் மதிப்பாய்வு செய்து வருகிறது. தொடக்க சம்பள மதிப்பாய்வைத் தவிர, பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் இந்தத் துறையில் சேர உள்ளூர்வாசிகளை ஈர்க்க S$20,000 வரையிலான உள்நுழைவு போனஸை (Sign-In-Bonus) அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உள்ளூர்வாசிகள் பஸ் கேப்டன் பணியில் இணைய வழக்கத்தை காட்டிலும் அதிக அளவிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் பல சலுகைகளும் அவர்களுக்கு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தனது எழுத்துப்பூர்வ உரையில் தெரிவித்தார்.
சிறந்த ஓய்வு நேர வசதிகள் மற்றும் பணிப் பட்டியலை மேம்படுத்துவதன் மூலம் ஓட்டுநர் பணிக்கு உள்ளுர்வாசிகள் இணையும் வாய்ப்பு மேம்படுத்தப்படுகின்றன என்று சியோவ் கூறினார். “வருங்கால பேருந்து கேப்டன்களின் மிகவும் மாறுபட்ட சுயவிவரத்தைப் பூர்த்தி செய்ய அவர்கள் மிகவும் நெகிழ்வான பணி ஏற்பாடுகள் மற்றும் பகுதிநேர வாய்ப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்,” என்று சியோவ் கூறினார். தொழில்முறைப்படுத்தல் குறித்து, பேருந்து கேப்டன்கள் பேருந்து ஆபரேட்டர்கள் மற்றும் சிங்கப்பூர் பேருந்து அகாடமியால் கட்டமைக்கப்பட்ட பயிற்சியைப் பெறுகிறார்கள் என்று சியோவ் கூறினார். இது அவர்களின் பணிப் பொறுப்புகளைக் கையாள அவர்களுக்கு பொதுவான திறன்கள் இருப்பதை உறுதி செய்கிறது என்று பொறுப்பு அமைச்சர் விளக்கினார்.
பேருந்து சேவை நிறுவனங்கள் அறிவித்த சலுகைகள்
சிங்கப்பூரில் செயல்படும் உள்ளூர் பேருந்து நிறுவனமான டவர் டிரான்சிட், இந்தத் தொழிலுக்குப் புதிதாக வருபவர்களுக்கு S$7,200 போனஸை வழங்குவதாக அறிவித்தது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற அமர்வில் தொழிலாளர் கட்சித் தலைவர் பிரிதம் சிங்கின் கேள்விக்கு எழுத்துப்பூர்வ நாடாளுமன்ற பதிலில், போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியோவ், 2024 ஆம் ஆண்டில் 9,700 பேருந்து கேப்டன்களில் 28 சதவீதம் பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் என்று கூறினார். நிரந்தர குடியிருப்பாளர்கள் 15 சதவீதம் பேர், வெளிநாட்டு வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மீதமுள்ள 57 சதவீதம் பேர் என்றார்.
சரி இந்த வேலைக்கு என்ன தகுதி வேண்டும்?
அவர்கள் சிங்கப்பூர் குடிமக்களாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களாகவோ இருக்க வேண்டும், குறைந்தபட்சம் Class 3 ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் மற்றும் ஒரு வருடத்திற்கும் மேலான ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதேபோல் பணியில் இணையும் உள்ளுர்வாசிகளுக்கு Go-Ahead சிங்கப்பூர் S$4,200 வரையிலான மாத சம்பளத்துடன் கூடுதலாக S$20,000 உள்நுழைவு போனஸை வழங்குகிறது. ஜூலை 5 முதல் Tampines இல் 27 பேருந்து வழித்தடங்களை கையகப்படுத்தும் நிறுவனம், அதன் பணியாளர்களை சுமார் 2,000 ஊழியர்களாக விரிவுபடுத்தியுள்ளதாகவும், East Coast Integrated Depot (ECID) இல் எதிர்கால செயல்பாடுகளை ஆதரிக்க சுமார் 300 பேருந்து கேப்டன்களை நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளது.