சிங்கப்பூரில் வருகின்ற 2027 ஆம் ஆண்டு முதல் இங்குள்ள பேருந்து ஓட்டுநர்களுக்கான ஊதிய வரம்பு உயர்த்தப்படுவிருக்கிறது. இதனால் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் பஸ் கேப்டனாக பணியில் இணையும் பொழுது அவர்களுடைய இயல்பான சம்பளத்திலிருந்து 450 வெள்ளி வரை சம்பளம் உயர அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது சராசரியாக சிங்கப்பூரில் உள்ள பேருந்து ஓட்டுநர்கள் இனி 3600 வெள்ளி முதல் 4000 வெள்ளி வரை மாத சம்பளமாக பெற வாய்ப்புகள் இருக்கிறது.
In Singapore – Bus drivers’ salaries to be increased; will ticket prices go up as a result?
இந்த சூழலில் பொது போக்குவரத்துகளில் பணியாற்றும் இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பதினால் அது பேருந்து கட்டண உயர்வாக பிரதிபலிக்குமா என்கின்ற அச்சம் பயணிகள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்த ஒரு தெளிவான அறிக்கையை தற்பொழுது நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. இந்த சம்பள உயர்வுக்கும் பேருந்து டிக்கெட் விலை உயர்வுக்கும் சம்பந்தம் இருக்குமா என்று மக்கள் முன்வைத்த கேள்விக்கு பதில் அளித்துள்ள சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் ஒவ்வொரு முறையும் கட்டண உயர்வு ஏற்படும் பொழுது அது சிங்கப்பூரின் பொது போக்குவரத்து கவுன்சிலின் மூலமாக மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் பொது போக்குவரத்திற்கான கட்டண உயர்வு என்பது Fare Adjustment Formula என்ற முறையின் கீழ் தான் கணக்கிடப்படுகிறது. ஆனால் தற்பொழுது நமது பொதுப்போக்குவரது ஓட்டுநர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சம்பள மாற்றம் என்பது மேற்கூறிய அந்த சூத்திரத்தின் ஒரு பகுதி அல்ல. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எல்டிஏ தெரிவித்து இருக்கிறது. கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான அறிவிப்பின்படி சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் இங்கிருக்கும் நிரந்தர குடியிருப்பாளர்கள் புதிய பேருந்து ஓட்டுநர்களாக இணையும் பொழுது அவர்களுடைய மாத சம்பளத்தில் 450 வெள்ளி உயர்த்தப்படும் என்றும் கூடுதலாக அவர்களுக்கு 2000 வெள்ளி Sign-On Bonus வழங்கப்படும் என்று நில போக்குவரத்து ஆணையும் அறிவித்தது.
இந்த துறையில் செயல்பட்டு வரும் பஸ் கேப்டன்களுக்கு தற்பொழுது வயது மூப்பு ஏற்பட்டு வருவதாலும் உள்ளூர் ஓட்டுனர்களின் அளவு குறைந்து வருவதாலும் இந்த நடவடிக்கையை எடுப்பதாகவும் நில போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும் அதிக அளவில் உள்ளூர் மக்களை இந்த பணியில் இருப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பதனால் இதற்கும் பேருந்து கட்டண உயர்வு இருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை பேருந்துக்கான கட்டண உயர்வு என்பது ஒரு நிலையான குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஏற்படும் விஷயம் என்பதால் பயணிகள் யாரும் அதை நினைத்து கவலைப்பட தேவையில்லை என்றும் LTA கூறியுள்ளது.
தற்பொழுது உலக அளவில் ஏற்பட்டு வரும் பதட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் உள்ளூர் பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் அதே நேரம் குடிமக்களும் இதனால் பாதிக்காத வண்ணம் தான் நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த சம்பள உயர்வை அமல்படுத்தி இருப்பதாகவும் அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதே நேரம் ஏற்கனவே பணியில் இருக்கும் நமது ஓட்டுநர்களுக்கும் 150 முதல் 250 வெள்ளி வரை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
