சிங்கப்பூரில் வரும் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் Heartbeat@Bedok-ல் நடைபெறும் சிங்கப்பூரின் முதல் சமூக விமானப் போக்குவரத்து தொழில் கண்காட்சியில் 18 விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் 2,000க்கும் மேற்பட்ட வேலைகள் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்த காலியிடங்கள் மேலாண்மை, நிர்வாக மற்றும் செயல்பாட்டுப் பணிகளை உள்ளடக்கியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வேலை தேடுபவர்கள் விரைவாக வேலைவாய்ப்பைப் பெற உதவும் வகையில் பத்து நிறுவனங்கள் ஆன்-சைட் நேர்காணல்களை நடத்தும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) இன்று பிப்ரவரி 27 அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள, விமான துறையில் ஆர்வம் உள்ள அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பலனடையலாம் என்று சிங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
Singapore’s first community aviation industry fair – More than 2,000 job opportunities.
பிரபல Accor Lounges நிறுவனம், பாதுகாப்பு சேவை நிறுவனமான Certis Group, விமான எஞ்சின் சப்ளையர் GE Aerospace, விமான சரக்கு கையாளுபவர் SATS, விமான பராமரிப்பு வழங்குநர் SIA பொறியியல் நிறுவனம் மற்றும் இயந்திர பழுதுபார்க்கும் நிறுவனமான Singapore Aero Engine Services ஆகியவை இந்த இரண்டு நாள் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கும் முக்கிய நிறுவனங்களாகும். பயணிகள் உறவுகள் அதிகாரிகள், துணை காவல் அதிகாரிகள், பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தளவாட உதவியாளர்கள், கேட்டரிங் அதிகாரிகள், விமான பயிற்சி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விமான திட்டமிடுபவர்கள் ஆகியோருக்கான நேர்காணல்கள் இதில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சாங்கி விமான நிலையக் குழுமம், பயண சேவை நிறுவனமான சாங்கி டிராவல் சர்வீசஸ், CAAS, பட்ஜெட் கேரியர் நிறுவனமான ஸ்கூட், அத்துடன் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பொறியியல் குழுவான ST இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்களும் இந்த இரு நாள் நிகழ்வில் (முதல் நாள் மட்டும் – பிப்.28) கலந்துகொள்கின்றன.
இந்தக் கண்காட்சி CAAS, தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (NTUC) வேலைவாய்ப்பு நிறுவனமான e2i, NTUC-ன் விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து தொழிற்சங்கக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகளுக்கு அப்பால், e2i வேலை தேடுபவர்களின் வேலை தேடல் உத்திகளைக் கூர்மைப்படுத்துவதற்கு உதவுவதற்காக தனிப்பயனாக்கப்பட்ட தொழில் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கும் என்று CAAS தெரிவித்துள்ளது. சிங்கையில் உள்ள இளைஞர்கள் மற்றும் விமானத்துறையில் ஆர்வம் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று CAAS தெரிவித்துள்ளது. இது ஒரு வேலைவாய்ப்பு முகாம் மட்டுமல்ல, மாறாக இளைஞர்களின் திறனை மேன்படுத்தவும் இந்த கலந்தாய்வில் பல விஷயங்கள் உள்ளது என்றும் CAAS தெரிவித்துள்ளது.
எப்படி கலந்துகொள்வது?
இந்த இரு நாள் முகாமில் கலந்துகொள்ள நினைப்பவர்கள் முதலில் https://go.gov.sg/eastsideoneaviationcareers என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் இளம் சிங்கப்பூரர்களுக்காக அடிக்கடி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித்தன்மை கொண்ட உலகில் இளம் சிங்கப்பூரர்கள் நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேருவதை உறுதி செய்யவே இதுபோன்ற முன்னெடுப்புகள் செய்யப்படுகிறது. இதுஒருபுரம் இருக்க, வேலைக்கான தகுதி மட்டுமல்லாமல் தங்களுடைய சுய திறனையும் இளைஞர்கள் அதிகரித்துக்கொள்ள பல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.