சிங்கப்பூரில் இன்று ஏப்ரல் 1 முதல் Beverage Container Return எனப்படும் குளிர்பான கொள்கலன்களை டெபாசிட் செய்யும் திட்டமானது அமலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நுகர்வோர் தாங்கள் வாங்கிய 150 மில்லி முதல் 3 லிட்டர் அளவிலான பான கொள்கலன்களை “ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்” மூலம் ஒப்படைத்து அதற்காக அவர்கள் ஏற்கனவே செலுத்திய 10 சென்ட் டெபாசிட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தற்போது இந்த திட்டத்தை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் BCRS Ltd என்கின்ற லாப நோக்கமற்ற ஒரு தன்னார்வல அமைப்பு நிர்வகிக்கிறது. மேலும் இது நமது தேசிய சுற்றுச்சூழல் முகைமையால் உரிமம் பெற்று CoCoCola, F&N ஃபுட்ஸ் மற்றும் பொக்கா ஆகிய பான உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. இந்த திட்டம் குறித்தும் இன்று முதல் அமலாக உள்ள சட்டங்கள் குறித்தும் விரிவாக காணலாம்.

Beverage Container Return – New scheme comes into effect in Singapore from today; key rules explained.

எந்தெந்த பாட்டில்கள் இதற்கு தகுதி பெறும்?

150 முதல் 3 லிட்டர் அளவிலான பிளாஸ்டிக் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட பாட்டில்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதி பெறும் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பாட்டில்களுக்கு என பிரத்தியேக டெபாசிட் மார்க் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நீங்கள் ஒரு பாட்டிலை இந்த வெண்டிங் இயந்திரத்திற்குள் செலுத்துவதற்கு முன்னால் அந்த கொள்கலன்கள் நசுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அதில் உள்ள பார்கோட் தெளிவாக தெரிய வேண்டும். மேலும் அவற்றை நீங்கள் அந்த இயந்திரத்திற்குள் போடும் பொழுது அந்த பாட்டில்கள் முற்றிலும் காலியாக இருக்க வேண்டும். டெபாசிட் செய்யும் முன் அவற்றை ஒரு முறை கழுவி விடுவது நல்லது. அதேநேரம் இந்த பார் கோட் இல்லாத பழைய பான கொள்கலன்களும் சந்தையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும்.

அந்த பழைய கொள்கைகளை இயந்திரங்களில் போட்டு நம்மால் பணம் பெற முடியாது. அதே நேரம் வருகின்ற அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் அனைத்து பான பாட்டில்களிலும் இந்த குறியீடு இருப்பது கட்டாயமாக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.

உணவகங்களின் நிலை என்ன?

ஒருவேளை நீங்கள் ஏதாவது உணவகத்தில் 150 முதல் 3 லிட்டர் அளவு கொண்ட பானங்களை வாங்கி குடிக்கும் பொழுது அங்கேயே அந்த பாட்டில்களை நீங்கள் விட்டுச் செல்லும் பட்சத்தில் அதற்கான வைப்புத்தொகை தொகை வசூலிக்கப்படாது. ஆனால் அதையே நீங்கள் பார்சல் என்ற முறையில் எடுத்துச் செல்லும் பொழுது 10 சென்ட் கூடுதலாக வசூலிக்கப்படும் பின்னர் நீங்கள் அதை இயந்திரத்தில் ஒப்படைத்து உங்களுக்கான அந்த டெபாசிட் பணத்தை திரும்பி பெற்றுக் கொள்ளலாம். இப்போதைக்கு சிங்கப்பூர் முழுவதற்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் அதிகமான இயந்திரங்கள் நமது HDB குடியிருப்பு வளாகங்களில் அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதிலிருந்து வெறும் ஐந்து நிமிட பயண தூரத்தில் இவை அமைக்கப்பட்டு இருப்பதால் இது பெரும்பாலான மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களை returnright.sg என்ற இணையதளம் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. அடுத்த சில மாதங்களில் அனைத்து ஹாக்கர் மையங்கள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் வளாகங்கள் மற்றும் பெரிய தொழில்துறை பகுதிகளிலும் இந்த இயந்திரங்கள் அமைக்க அரசு ஆவணம் செய்து வருகிறது.

டெபாசிட் பணத்தை திரும்ப பெறுவது எப்படி?

நீங்கள் இயந்திரத்தில் கொள்கைகளை ஒவ்வொன்றாக செலுத்த வேண்டும் அது அந்த இயந்திரத்தால் குறியீடு வழியாக சரிபார்க்கப்படும். அதன் பிறகு உங்களது PayNow அல்லது EzLink போன்ற மின்னணு முறைகள் மூலம் உங்களுடைய பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். சில இடங்களில் வவுச்சராகவும் நீங்கள் அதை வாங்கிக் கொள்ளலாம். மறுசுழற்சி விதத்தை சிங்கப்பூரில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கவே இந்த முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த செயல்முறையின் மூலம் ஆண்டுக்கு சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான கொள்கல்கள் சேகரிக்கப்பட்டு கிட்டத்தட்ட 16,000 டன் அளவிலான பிளாஸ்டிக் மற்றும் உலோகங்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் என்று அரசு எதிர்பார்க்கிறது.