வருகின்ற ஜூன் மாதம் பள்ளி விடுமுறைக்கு முன்னதாக சிங்கப்பூரில் மிக மிக அரிதாக நடக்கும் மிக நீண்ட வார இறுதி நாட்கள் இப்பொழுது வந்திருக்கிறது. இதனால் பல சிங்கப்பூரர்கள் வழக்கத்தை விட முன்னதாகவே பிரபலமான வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள இப்பொழுது தொடங்கி இருக்கின்றனர். நேற்று மே 27 ஆம் தேதி புதன்கிழமை ஹரி ராயா ஹாஜி மற்றும் மே 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று Vesak Day வருவதால் அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமை புது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Singapore – A rare Super Long Weekend arrives; Singaporeans celebrate overseas.
அதுவும் சரியாக ஜூன் மாத பள்ளி விடுமுறை தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக இந்த விடுமுறைகள் வருவதால் பல சிங்கப்பூரர்கள் தற்பொழுது தங்களுடைய வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள தொடங்கி விட்டனர். இதுகுறித்து செய்தி நிறுவனங்களிடம் பேசிய ஒரு பிரபல சுற்றுலா முகவர் “பெரும்பாலான சிங்கப்பூர் இந்த மிக நீண்ட வார இறுதி நாட்களை பயன்படுத்திக் கொண்டு தங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க திட்டமிட்டு வருகின்றனர். ஏற்கனவே பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலாவிற்கு சென்று இருப்பதாகவும் இந்த பொது விடுமுறை நாளின் அமைப்பின்படி நான்கு நாட்கள் மட்டுமே வருடாந்திர விடுப்பு எடுத்தாலே அவர்களுக்கு தொடர்ச்சியாக 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்பதனால் பல சிங்கப்பூர் குடும்பங்கள் இந்த அரிதாக கிடைக்கும் விடுமுறைகளை பயன்படுத்திக் கொண்டு சுற்றுலாவை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல Hong Thai Travel நிறுவனத்தின் மூத்த மேலாளர் பேசுபியில் இந்த மிக நீண்ட வார இறுதி நாட்களை கணக்கில் கொண்டு முன்னரே திட்டமிட்டு அதற்காக தங்களுடைய அலுவலகங்களில் விடுமுறையும் எடுத்து சில வாடிக்கையாளர்கள் கடந்த மே 23ஆம் தேதியே தங்களுடைய வெளிநாட்டு பயணத்தை தொடங்கியதாக கூறியிருக்கிறார்.
உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாக நம்முடைய சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கிறது. அதனால் சிங்கப்பூரர்கள் அதிகம் விரும்பும் சுற்றுலா தளங்களான ஜப்பான், சீனா, தென்கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூரர்கள் தற்பொழுது படையெடுத்து வருவதாக அவர் கூறியிருக்கிறார். சி டி சி டிராவல் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மேலாளர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “நமக்கு விசா இல்லாத பயணக் கொள்கை பல நாடுகளுக்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சீனாவும் தற்பொழுது சிங்கப்பூரர்களின் மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாக மாறி இருக்கிறது என்று கூறினார்.
2024 பிப்ரவரியில் சீனா ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியது அதன்படி சிங்கப்பூர் மற்றும் சீனா இடையே பரஸ்பரமாக 30 நாட்கள் விசா விலக்கோடு பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதனால் தற்பொழுது அதிகளவிலான சிங்கப்பூரர்கள் சீனாவிற்கு பயணம் செய்து வருவதாகவும் அவர் கூறினார். பொதுவாக ஜூன் மாதம் பள்ளி விடுமுறை நாட்களில் வரும் பொழுது தங்கள் குழந்தைகளுடன் வெளியிடங்களுக்கு பயணம் செய்யும் சிங்கப்பூரர்கள் இந்த முறை மிக நீண்ட வார இறுதி நாள் வந்திருப்பதால் அந்த பயணங்களை முன்கூட்டியே தொடங்கிவிட்டனர்.
வருகின்ற (நாளை) வெள்ளிக்கிழமை ஒரு சிலருக்கு பள்ளி உள்ள நிலையில் அந்த வகுப்புகள் முடிந்த மறுநாளே இன்னும் அதிகமான சிங்கப்பூர் வாசிகள் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மகிழ்ச்சியுடன் பயண முகவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
