சிங்கப்பூரில் கொசுக்களை ஒழிக்க விரைவான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வரும் அதே நேரம் தற்பொழுது சிக்காடா பூச்சிகளால் ஏற்படும் பிரச்சனையையும் தடுக்க சிங்கை அரசு ஆவணம் செய்து வருகிறது. குறிப்பாக சிங்கப்பூரின் டேம்பின்ஸ் சாங்காட் பகுதியில் வருடம் தோறும் படையெடுத்து வரும் இந்த சிக்காடா பூச்சிகளை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சகம் ஒரு சிறப்பு பணி குழுவை அமைத்திருக்கிறது. இதுவரை அந்த பணிக்குழு கிட்டத்தட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிக்காடா பூச்சிகளை பிடித்துள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளது. காரணம் இந்த பூச்சிகள், எண்ணிக்கையின் அளவில் வெகு விரைவாக உயர்ந்துவிடும் என்பதால் அது இயற்கையின் சமநிலையை பெரிய அளவில் மாற்றும் என்றும் அந்த மாற்றத்தை சரி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த பணிக்குழு அறிவித்திருக்கிறது.

Amid mosquito issues, cicadas swarm Singapore – Task force steps in.

ட்ராப் வைத்து பிடிக்கும் பணிக்குழு

பொதுவாக இந்த வகை பூச்சிகளை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல, இந்த பூச்சிகள் வீட்டுக்குள் நுழையாமல் இருக்க முதலில் இதற்கான பொறிகளை அமைக்க வேண்டும், பொதுவாக எல்லா பூச்சிகளும் ஒளியினால் ஈர்க்கப்படும் என்பதனால் “Light Traps” எனப்படும் ஒளி பொறிகளை கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் இரவு நேரங்களில் அமைத்து இந்த சிக்காடா பூச்சிகளை பணி குழுவினர் பிடித்து வருகின்றனர். குறிப்பாக ஆரஞ்சு நிற றெக்கை கொண்ட சிக்காடா பூச்சிகள் தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாகக் கொண்டவை என்றாலும் சிங்கப்பூருக்கு இவை புதிய இனமாகவே கருதப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 10ம் தேதி முதல் இந்த ஏப்ரல் 23ஆம் தேதி வரை பிடிபட்ட பல பூச்சிகள் இந்த ஆரஞ்சு இறக்கை கொண்ட சிக்காடா பூச்சிகள் தான் என்கிறது பணிக்குழு.

Foo Maosheng என்ற பூச்சியியல் வல்லுனர் இதுகுறித்து பேசிய பொழுது “சிங்கப்பூரை பொறுத்தவரை இவ்வகை சிக்காடா பூச்சிகளை இயற்கையாகவே வேட்டையாடிக் கொள்ளக்கூடிய “பிரிடேட்டர்ஸ்” எனப்படும் எதிரிகள் நம் நிலத்தில் இல்லாதது தான் இந்த பூச்சிகளின் அதீத வளர்ச்சிக்கு காரணமாக மாறுகிறது. அதனாலையே இவற்றை வேட்டையாட மனித பணி குழுக்கள் பயன்படுத்தப்படுவதாக” அவர் கூறியிருக்கிறார். டேம்பின்ஸ் சாலை 22 மற்றும் 33 ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் அதிகாலை நேரத்திலேயே இந்த பூச்சிகள் எழுப்பும் இரைச்சல் சத்தத்தினால் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் சிலர் இந்த பூச்சிகள் எழுப்பும் அதீத சத்தத்தினால் அவை வசிக்கும் மரத்தையே வெட்டும் அளவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

காரணம் சிக்காடா பூச்சிகள் மிக அதிக அளவில் சத்தமான இரைச்சல்களை போடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால இந்த வகை பூச்சிகளை அழிக்க தற்பொழுது பணிக்குழு தன்னுடைய பணியை செய்து வருகிறது. மேலும் இந்த பூச்சிகள் மண்ணில் இருந்து தான் புறப்பட்டு வெளியேறும் என்பதனால் நிலத்தில் இருக்கும் பூச்சிகளை வெளியே வருவதை குறைக்க மண்ணீது விரிப்புகள் போடப்படுகின்றன என்றும், அலுமினியம் பாயில்கள் கொண்டு இவை மரத்தில் தங்காமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது என்றும் நடைபாதையில் உள்ள விளக்குகளின் நிறம் மற்றும் அடர்த்தியை குறைப்பதன் மூலம் இவற்றை அதன் அருகில் ஈர்ப்பதை குறைக்க முடியும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதே நேரம் இந்த சிக்காடா மனிதர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பது அல்ல, மேலும் அவை மனிதர்களை கடிப்பதும் அல்ல என்பதனால் இவை மனிதர்களுக்கு சத்தத்தின் மூலம் மட்டுமே பிரச்சனையாக இருக்கும் என்றும் மே முதல் ஜூன் மாசம் வரை இணைச்சேர்க்கைக்காகவே அதிக அளவில் கூடுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. முன்பே கூறியதைப் போல இந்த ஆரஞ்சு இறக்கை கொண்ட சிக்காடா பூச்சிகள் தென்கிழக்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்டவை, இங்கே இறக்குமதி செய்யப்படும் செடிகள் அல்லது மண்ணின் வழியாக இவை சிங்கப்பூருக்கு வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.