நாளை வெள்ளிக்கிழமை மே மாதம் 1ம் தேதி சிங்கப்பூரிலும் உழைப்பாளர்கள் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் FairPrice நிறுவனம் அத்தியாவசிய பொருட்களுக்கு 50% தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. இது குறித்து முழுமையாக இந்த பதிவில் காணலாம்.
போர் காரணமாக தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகளை குறைக்கும் வகையில் ஏற்கனவே சிங்கப்பூர் அரசு நமது குடிமக்களுக்கு பல நல்ல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இந்த சூழலில் சிங்கப்பூரின் பிரபல FairPrice நிறுவனம் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களுக்கு 50% தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறது. அதனால் மே தினத்தை முன்னிட்டு FairPrice குழுமம் தனது பல்பொருள் அங்காடிகளில் குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் 50 சதவீத தள்ளுபடியை அதுவும் நான்கு வாரங்களுக்கு வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
மேலும் இந்த தள்ளுபடி ஆனது NTUC யூனியன் மற்றும் லிங்க் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று ஏப்ரல் 30ஆம் தேதி முதல் நான்கு வாரங்களுக்கு, அதாவது மே 17ஆம் தேதி வரை இந்த 50% தள்ளுபடி என்பது நடைமுறையில் இருக்கும். ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட அத்தியாவசிய பொருட்கள் மேற்கூறிய அந்த 50% தள்ளுபடி விலையில் FairPrice குழுமம் எங்கிலும் விற்பனை செய்யப்படும். மேலும் இன்று ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 3ம் தேதி வரை சமையல் எண்ணெய் போன்ற சில முக்கியமான பொருட்கள் ஐம்பது சதவீத தள்ளுபடியில் கிடைக்க உள்ளது. ஏற்கனவே போர் சூழலால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில் சிங்கப்பூரில் அதிகரித்திருக்கும் வாழ்க்கை செலவுகளை சமாளிக்கவே இந்த நடவடிக்கையை எடுக்கப்படுவதாக FairPrice நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் FairPrice தவிர Kopitiam உணவகங்களில் NTUC யூனியன் உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பி மற்றும் தேனீர் ஆகியவை வெறும் 50 காசுக்கு கிடைக்கும் என்றும் இந்த சலுகையானது மே மாதம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எப்படி இந்த சலுகையை பெறுவது?
இந்த சலுகை பெறுவதற்கு பிரத்தியமாக எதுவும் செய்யத் தேவையில்லை. NTUC யூனியன் அட்டைதாரர்கள் தங்களுடைய யூனியன் அட்டையை அல்லது லிங்க் கார்டை பொருட்களை வாங்கும் பொழுது காண்பித்து இந்த தள்ளுபடியை பெற்றுக் கொள்ளலாம். அல்லது FairPrice-ன் செயலியையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வெள்ளி அளவிலான பணத்தை சேமிக்கும் என்றும் இதனால் நடுத்தர வருட மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் FairPrice நிறுவனம் தெரிவித்திருக்கிறது. உண்மையில் இந்த தொழிலாளர் தினத்தை ஒரு சிறந்த முறையில் அவர்கள் கொண்டாட இது வழிவகுக்கும் என்றும் அந்நிறுவனம் கூறி இருக்கிறது.