சிங்கப்பூர் பெரிய அளவில் புகை மாசு இல்லாத ஒரு நாடு என்பதால் நமது வானில் நிலவும் பல அழகிய நிகழ்வுகளை நாம் வெறும் கண்களாலேயே கண்டு ரசிக்க முடியும். அந்த வகையில் Eta Aquarids என்ற விண்கள் மழையை விரைவில் சிங்கப்பூரர்கள் தங்களுடைய வெறும் கண்களாலேயே கண்டு களிக்கலாம் என்று நமது வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.
Meteor shower to light up Singapore skies – Visible to the naked eye; when to watch?
Halley’s என்ற வால் நட்சத்திரத்தின் பாதையில் இருந்து உருவாகும் விண்கல் மழையை தான் Eta Aquarids என்று அழைக்கின்றனர். வருகின்ற மே மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அதிகாலை நேரங்களில் இந்த விண்கல் மழை நம்முடைய சிங்கப்பூர் வானில் மிகத் தெளிவாக தென்படும். இது குறித்து நமது சிங்கப்பூர் அறிவியல் மைய வான் ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வருகின்ற மே மாதம் 2ம் தேதி மேலே குறிப்பிட்ட அந்த Halley’s வால் நட்சத்திரம் மேலே உள்ள சிறு கோள்கள் அல்லது பிற தூசி பாதைகள் வழியே கடந்து செல்லும் பொழுது அதனுடைய சில பாகங்கள் மோதி அது ஒரு விண்கல் மழை போன்ற தோற்றத்தை நமக்கு கொடுக்கும். அவை வானில் வேகமாக நகரும் ஒளி கீற்றுகள் போல நமக்கு தோற்றமளிக்கும் என்கிறது.
மே 2ம் தேதியே நடக்கிறது என்றாலும் நமது சிங்கப்பூர் வானில் அது நமக்கு மே 6ஆம் தேதி இரவும் மே 7ஆம் தேதி அதிகாலையிலும் தென்படும் என்று வான ஆய்வகம் தெரிவித்திருக்கின்றது. இதைத்தான் நாம் சூட்டிங் ஸ்டார்ஸ் அல்லது ஏரிகர்கள் என்று அழைக்கிறோம்.
18ம் நூற்றாண்டு வரை இந்த வால் நட்சத்திரங்கள் என்பது ஒரு முறை மட்டுமே சூரிய குடும்பத்திற்கு வந்து செல்பவை என்று கருதப்பட்டது. ஆனால் Edmond Halley என்கின்ற வானவியல் ஆய்வாளர் தான் சில நியூட்டன் விதிகளை ஆராய்ந்து இது நமது சூரிய குடும்பத்தில் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக நடக்கும் ஒரு நிகழ்வு என்று கண்டறிந்தார். அதனால் இன்றும் நம்மால் இது போன்ற பல வால் நட்சத்திரங்கள் நமது பூமியை கடந்து செல்வதை காண முடிகிறது. இந்த Eta Aquarids-ஐ பொறுத்தவரை வருகின்ற மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காலை 3 மணிக்கு மேல் இவை வானில் நன்றாகவே தென்படும்.
இந்த விண்கற்கள் அனைத்தும் வினாடிக்கு கிட்டத்தட்ட 65 கிலோ மீட்டர் வேகத்தில் நம்முடைய வளிமண்டலத்தில் உள்ள நுழைந்து செல்லும் என்பதால் சில விண்கற்கள் எரிந்து முடிந்த பிறகும் கூட சில நிமிடங்கள் நீடித்து அதனுடைய ஒளி பாதையை விட்டு விலகிச் செல்லும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 50 விண்கற்கள் வரை வரக்கூடும் என்றும் இதில் நமது சிங்கப்பூர் வான்பரப்பை பொறுத்தவரை மணிக்கு சுமார் 10 முதல் 20 விண்கற்கள் வரை தெரிய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. முன்பே கூறியதைப் போல கடற்கரைகள், பூங்காக்கள் அல்லது திறந்த வெளியில் வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தில் இதை அழகாக கண்டு ரசிக்கலாம்.