சிங்கப்பூரில் எரிபொருள் விநியோகமானது தற்பொழுது சீராக இருப்பதாகவும், ஏற்கனவே நமது நாட்டில் கையிருப்பில் இருக்கும் எரிபொருள் குறையவில்லை என்றும் நமது சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சகத்தின் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியோ நேற்று மார்ச் 26 ஆம் தேதி நடந்த கலந்தாய்வில் கூறியிருக்கிறார். மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் துவங்கிய போர் பதற்றம் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தை எட்டியுள்ள நிலையில் உலக அளவில் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் தன்னுடைய நாட்டில் “எனர்ஜி எமர்ஜென்சியை” அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிங்கப்பூரில் எரிபொருள் விநியோக நிலை என்பது தற்பொழுது சீராக இருப்பதாகவும் போதிய கையிருப்பு நம்மிடம் இருக்கிறது என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.

“Public need not fear… Singapore’s fuel reserves are stable,” assures minister.

இருப்பினும் உலக அளவில் நிலவும் பற்றாக்குறையால் எரிபொருள் விலைகள் போக்குவரத்து செலவுகளில் அதனுடைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அமைச்சர் ஜெஃப்ரி கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையை சிங்கை அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் இதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து மதிப்பீடு செய்ய உள்ளதாகவும் ஜெஃப்ரி தெரிவித்தார். மத்திய கிழக்கு போர் இங்கே உள்ள நமது போக்குவரத்து துறைகளில் ஏற்படுத்தி உள்ள பாதிப்பு மற்றும் அதற்காக நமது அரசு திட்டமிட்டுள்ள சில ஆதரவுகள் குறித்து மதிப்பீடு செய்து வருவதாகவும் ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் கூறினார்.

நிதி அமைச்சகத்தின் மூத்த அமைச்சராகவும் செயல்படும் திரு ஜெஃப்ரி அவர்கள் சிங்கப்பூரில் ஒருவேளை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கவே கூடாது, காரணம் எரிபொருள் விநியோகம் நம்மை பொருத்தவரை சீராகவே இருக்கின்றது. நமக்கான எரிபொருள் சந்தையும் இயல்பானதாகவே இருக்கிறது, நம்மிடம் இருக்கும் குறையவில்லை, நமக்கான எரிபொருள் விநியோக பாதைகளும் திறந்தே இருக்கின்றது என்று அவர் மக்களின் பயத்திற்கு ஒரு மிகப்பெரிய ஆறுதலை கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக சிங்கையை பொறுத்தவரை எரிபொருள் நிலைமை சீராக இருந்தாலும் அது இறுதிவரை சீராகவே இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் அதனுடைய நிலைமையை கண்காணித்து வருவதாகவும் திரு ஜெஃப்ரி அவர்கள் தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் குறித்து பேசிய அவர் இந்த சந்தை மாற்றங்கள் மூலம் அந்த தாக்கத்தின் ஒரு பகுதி சரி செய்யப்பட்டுள்ளது என்றாலும், நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பிறகு இந்த எரிபொருள் விலை உயர்வு குறித்து நம்மால் முழுமையான பதிலை கூற முடியும் என்றார் அவர். உதாரணமாக ஏற்கனவே விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ள நிலையில் சிங்கப்பூரை பொருத்தவரை Platform நிறுவனங்களாக செயல்படும் கிராப் மற்றும் புட்பாண்டா போன்றவை தங்களுடைய ஓட்டுநர்களுடைய நிலையை எண்ணி அவர்களுக்கு எரிபொருள் மானியங்களை வழங்கி வருவதாகவும் சில சேவைகளுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோல ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வால் தரை, வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்து பயனாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருவது உண்மைதான் என்றும், சில விமான நிலையங்கள் மற்றும் படகு சவாரிகளை நமக்கு அளித்து வரும் நிறுவனங்கள் எரிபொருள் விலையேற்றத்தால் கட்டண உயர்வை அமல்படுத்தி இருப்பதை அரசு அரிகிறது என்றும் அவர் கூறினார். மார்ச் 26 நிலவரப்படி சிங்கப்பூரில் 95 ஆக்டிங் பெட்ரோல் Caltex, Esso மற்றும் Sinopec ஆகிய நிலையங்களில் லிட்டருக்கு 3.47 செண்டுகளாகவும் ஷெல் நிறுவனத்தில் 3.42 என்ற நிலையிலும், மேலும் எஸ்பிசி நிறுவனம் 3.46 வசூலிக்கிறது என்றும், மேலும் SPC லிட்டருக்கு இருப்பதிலேயே குறைவாக லிட்டருக்கு 2.48 வசூலிப்பதாகவும் கூறியுள்ளார். அதே நேரம் இந்த விலை கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் துவங்கிய அன்று 2.88 ஆகா இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.