ஏற்கனவே தொழில்நுட்பத்தில் பல புதிய புரட்சிகளை ஏற்படுத்தி வரும் நமது சிங்கப்பூர் தன்னுடைய புதிய சூப்பர் கம்ப்யூட்டரை தற்பொழுது உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இது ஏற்கனவே நமது சிங்கையில் உள்ள இரண்டு மாடல்களின் கூட்டுத் திறனைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக சக்தி வாய்ந்த ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த பதிவில் அந்த சூப்பர் கம்ப்யூட்டர் குறித்து விரிவாக காணலாம்.
“Aspire 2B enters the field in Singapore with many times more power” – Minister Josephine Teo expressed admiration.
Aspire 2B
Aspire 2B என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஆராய்ச்சியாளர்களுக்கும் நமது சிங்கப்பூர் சார்ந்த தேசிய திட்டங்களுக்கும் ஆதரவளிக்க மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் காலநிலை மாதிரியாக்கம், சுகாதாரம் மற்றும் நமது சிங்கப்பூரின் நகர்புற பின்னடைவு போன்ற துறைகளில் ஏற்கனவே வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சார்ந்த ஆராய்ச்சி முயற்சிகளுக்கான, ஒரு சோதனைக்களமாகவும் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புத்தம் புதிய அஸ்பயர் 2பி சூப்பர் கம்ப்யூட்டர், நேற்று ஜூன் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு அறிமுக விழாவில் இது சிங்கை மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறை அமைச்சர் ஜோஸ்பின் தீயோ இதனை தொடங்கி வைத்து சொற்பொழிவு ஆற்றினார். மேலும் தற்பொழுது அந்த சூப்பர் கம்ப்யூட்டர் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நான் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
நமது சிங்கப்பூரின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மையம் இதுவரை உருவாக்கியதில் மிகப் பெரியது மற்றும் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டராக ஆஸ்பயர் 2பி தற்பொழுது பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து பேசிய அமைச்சர் தீயோ Aspire 2B கணினியின் திறனை வெகுவாக பாராட்டினார். இருப்பினும் வெறும் எண்களில் மட்டும் நாம் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, எதிர்காலங்களில் சிங்கப்பூர் நடத்தும் சோதனைகளின் நோக்கம் மற்றும் அதற்கான சாராம்சத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆஸ்பயர் 2பி மூலம் இதற்கு முன்னதாக சிங்கப்பூரில் பயிற்றுவிக்க முடியாத அளவுக்கு மிகவும் பெரிதாக இருந்த சில மாடல்களை கூட இப்போது இங்கேயே பயிற்றுவிக்க முடியும். ஏற்கனவே இருந்த சில சவால்களை தவிர்த்து நமக்கு தேவையான சிலவற்றை இதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
மேலும் இந்த ஆஸ்பயர் 2பி நமக்கு எந்த வகையில் எல்லாம் உதவப் போகிறது என்கின்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் “கடுமையான மழைப்பொழிவு மற்றும் கடல்மட்ட உயர்வு போன்ற காரணிகளை நமக்கு முன்கூட்டியே கணிக்க உதவக்கூடிய ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் இது. அதனை அடிப்படையாகக் கொண்டு நம் சிங்கப்பூரில் ஒட்டுமொத்த நகர்ப்புற மேம்பாடு மற்றும் கடலோர பாதுகாப்பு அரன்களை நம்மால் திட்டமிட முடியும்” என்றும் அவர் தெரிவித்தார். தென்கிழக்கு ஆசிய மொழிகள் பலவற்றை புரிந்து கொள்ளும் உலகின் முதல் மல்டி மாடல் மெர்லின் குறித்தும் அமைச்சர் உதாரணம் காட்டினார்.
