சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தான் FairPrice. தற்பொழுது அந்த நிறுவனம் ஏற்கனவே வழங்கிய ஒரு சலுகையை இன்னும் சில நாட்கள் நீட்டிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி சிங்கப்பூரில் உள்ள அனைத்து FairPrice சூப்பர் மார்க்கெட் கிளைகளிலும் பொருட்களை வாங்குபவர்கள் ஒரே ரசீதில் தங்களுடைய CDC வவுச்சர்கள் மற்றும் SG60 வவுச்சர்களை பயன்படுத்தி செலவு செய்யும் ஒவ்வொரு 60 வெள்ளி தொகைக்கும் இணையாக அவர்களுக்கு ஆறு வெள்ளி மதிப்பிலான வவுச்சர்கள் திரும்ப கிடைக்க உள்ளது.
அந்த சலுகைகளை அவர்கள் பயன்படுத்த இன்னும் நான்கு நாட்கள் நீட்டிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுடைய வாழ்க்கை செலவுகளை கையாள அவ்வப்போது இந்த நிறுவனம் தன்னுடைய சூப்பர் மார்க்கெட் கிளைகள் அனைத்திலும் பல வகையான சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போர் பதற்றத்தின் காரணமாக பல அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிய நிலையில், கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு பல அத்தியாவசிய பொருட்களின் விலையை Freeze செய்து இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட சிங்கப்பூரின் CDC வவுச்சர்களை தங்களுடைய சூப்பர் மார்க்கெட்டில் பயன்படுத்துபவர்களுக்கு வவுச்சர்கள் வழங்கும் திட்டத்தை FairPrice அறிவித்தது. ஜூன் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த சலுகை நேற்று ஜூன் 17ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், மக்களில் பலர் இன்னும் அதை முறையாக பயன்படுத்தவில்லை என்பதனால் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த சலுகை 4 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக FairPrice அறிவித்திருக்கிறது.
தங்களுடைய CDC வவுச்சர்கள் மற்றும் SG60 வவுச்சர்களை கொண்டு வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 20 வவுச்சர்கள் வரை பெறலாம். இந்த வவுச்சர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட நாளில் இருந்து ஜூலை 31ஆம் தேதி வரை குறைந்தபட்ச வரம்பு இன்றி அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது அவர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு 60 வெள்ளி சிடிசி வவுச்சர்களுக்கு அல்லது SG60 வவுச்சர்களுக்கு ஆறு வெள்ளிக்கான வவ்சர் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் அறிந்திருக்கிறது..
சிங்கப்பூரில் தொடர்ச்சியாக மாறிவரும் பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் குறைந்து வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்த தள்ளுபடி செயல்பாட்டில் வைக்கப்படுகிறது. மலிவு விலையில் மக்கள் அனைவருக்கும் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதே தங்களுடைய ஒரே முயற்சி என்றும் மேலும் நமது சிங்கப்பூர் அரசின் சிடிசி வவுச்சர் முறையை இன்னும் மதிப்பு மிக்கதாக அதிகரிக்கும் என்றும் FairPrice நம்புகிறது. பொதுமக்கள் தங்களுடைய மாத மளிகை பொருட்களுக்கான பட்ஜெட்டை சிக்கனமாக கையாளவும் இந்த முறை வழிவகுக்கிறது.
