சிங்கப்பூரில் வருகின்ற 2027 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட மாதத்திற்கு 4000 வெள்ளி வரை சம்பளம் அதிகரிக்கும் வகையில் புதிதாக பணியில் சேரும் பேருந்து ஓட்டுநர்களுக்கு சில வழிவகைகள் செய்யப்படுவதாக நமது சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

தற்போதைய நிலையை பொறுத்தவரை சிங்கப்பூரர்கள் மற்றும், நிரந்தர வசிப்பாளர்கள் அல்லாதவர்கள் தான் சிங்கப்பூரில் அதிக அளவிலான பேருந்துகளை இயக்குகின்றனர். இந்த சூழலில் சிங்கப்பூரர்களை மற்றும் நிரந்தர வசிப்பாளர்களை இந்த வேலைக்கு அதிக அளவில் ஈர்க்க நமது நிலப் போக்குவரத்து ஆணையம் ஏற்கனவே பல முடிவுகளை எடுத்து வருகின்றது. இந்த சூழலில் வருகின்ற 2027 ஆம் ஆண்டு முதல் புதிய சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்ற PR-கள் பேருந்து ஓட்டுநர்களின் மாதாந்திர சம்பளத்தில் கிட்டத்தட்ட 450 வெள்ளி வரை உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த பணிகளில் இணையும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அவர்கள் வேலைக்கு சேரும்பொழுது 2000 வெள்ளி ஊக்கத்தொகை (Sign-On-Bonus) வழங்கவும் அரசு முடிவு எடுத்திருக்கிறது. இதன் மூலம் அவர்கள் ஒரு பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் பொழுது அவர்களுக்கு வழங்கப்படும் இதர படிகள், ஓவர் டைம் ஊதியம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு ஆரம்ப நிலை பேருந்து ஓட்டுனருக்கு சிங்கப்பூரில் 3600-லிருந்து நான்காயிரம் வெள்ளி வரை சம்பளம் உயர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதே நேரம் தற்பொழுது பேருந்து ஓட்டுநர்களாக சிங்கப்பூரில் பணியாற்றி வரும் சிங்கப்பூரர்களுக்கும், நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் ஒரு நியாய தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளவும் அவர்களுடைய கடின மற்றும் சிறப்பான உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் நில போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது. NTUW எனப்படும் தேசிய போக்குவரத்து தொழில் சங்கம் மற்றும் நான்கு பொது போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து நேற்று ஜூன் மூன்றாம் தேதி அன்று வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் இந்த சம்பள உயர்வு குறித்து முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய அறிவிப்பினை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் Go-Ahead Singapore, SBS Transit, SMRT Buses மற்றும் Tower Transit Singapore ஆகிய நான்கு பேருந்து நிறுவனங்களே ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள ஓட்டுநர்களின் வயது முதிர்வு மற்றும் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பேருந்துகளின் வழித்தட எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை புதிய பேருந்து ஓட்டுநர்களாக இருப்பதிலும் ஏற்கனவே இங்குள்ள பழைய ஓட்டுனர்களை தக்க வைத்துக் கொள்வதிலும் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மத்தியில் தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரை பொறுத்தவரை இங்கு மொத்தம் 14 பேருந்து தொகுப்புகள் இருப்பது அனைவரும் அறிந்ததே மேலும் இதற்கான ஒப்பந்தங்களை வெல்லும் நிறுவனங்களுக்கு அதற்கு உட்பட்ட பேருந்து சேவைகளை இயக்குவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.