கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதலிலேயே சிங்கப்பூரில் உள்ள சிங்டெல் வாடிக்கையாளர்கள் சேவை இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் நேற்று திங்கட்கிழமை மார்ச் 23ஆம் தேதி மதியம் அதன் வாடிக்கையாளர்கள் மீண்டும் சில சேவை தண்டங்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும் கடந்த வாரம் நிகழ்ந்த சேவை இடர்பாடுகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரச்சனை என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நேற்று மதியம் 3.40 மணியளவில் “டவுன் டிடெக்டர்” என்ற இணையத்தின் தரவுகளின்படி சுமார் 9700-க்கும் மேற்பட்ட புகார்கள் சிங்டெல் வாடிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பலரும் தங்களுடைய இணைய வழி சேவையில் சிக்கல்கள் இருப்பதாக புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Issue occurred four times in a week in Singapore – Singtel customers struggling.
சிங்டெல் நிறுவனம் விளக்கம்..!
இந்த தடங்கல் குறித்து தன்னுடைய முகநூல் பதிவில் பேசியுள்ள சிங்டெல் நிறுவனம்… “இன்று திங்கட்கிழமை மதியம் 3.45 மணி அளவில் ஒரு சில வாடிக்கையாளர்களை பாதித்த இந்த பிரச்சனை முற்றிலும் மாறுபட்டது. எங்கள் அதிகாரிகள் சோதித்தது இது ஒரு சர்வதேச போக்குவரத்து மேம்படுத்துதல் தொடர்பான பிரச்சனை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது வெறும் 15 நிமிடங்களிலேயே சரி செய்யப்பட்டு விட்டது” என்றும் அந்நிறுவனம் தனது பதிவில் தெரிவித்து இருந்தது. அதே நேரம் தற்பொழுது சிங்டெலின் உள்ளூர் நெட்வொர்க் வழக்கம் போல இருப்பதாகவும், அது எதிர்பார்த்தபடி இயங்குவதாகவும் அந்த நிறுவனம் உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த திடீர் பாதிப்பால் தங்களுடைய இணைய சேவை செயல்படவில்லை என்றும், இதனால் சில ஆன்லைன் மீட்டிங், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இணைப்புகளில் பாதிக்கப்பட்டதாக பல வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஏற்கனவே போர் படுத்தும்பாடு..!
போரின் காரணமாக ஏற்கனவே சிங்கப்பூரில் எரிபொருள் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி கிட்டத்தட்ட 9 மணி நேரம் சிங்டெல் நிறுவனத்தின் மொபைல் சேவைகள் பாதிப்பு அடைந்தது. அதைத்தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதியும் கிட்டத்தட்ட 2000 வாடிக்கையாளர்கள் தங்களுடைய சேவையில் இடர்பாடு இருப்பதாக புகார் கூறியிருந்தனர். அதைத்தொடர்ந்து மூன்றாவது நாளாக மார்ச் 18ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் ஒரு சிறிய அளவினால் நெட்போர்ட் டிராபிக் சிங்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய சிங்டெல் நிறுவனத்தின் சிங்கப்பூர் தலைமை நிர்வாக அதிகாரி. Ng Tian Chong கடந்த வார முடிவில் இருந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தொடர் பாதிப்புகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது ஆனால் எங்களுடைய நெட்வொர்க் வலிமையை மேம்படுத்தவும், இனி வரும் காலங்களில் விரைவாக எந்த பிரச்சினையும் சரி செய்யவும் நாங்கள் பணியாற்றுவோம் என்று அவர் உறுதி அளித்திருந்தார்.
சைபர் தாக்குதல் அல்ல
சிங்கப்பூரில் ஏற்பட்ட இந்த தொடர் இனிய சேவை பிரச்சனையால் பலர் இது ஒரு சைபர் தாக்குதலாக இருக்குமோ என்று நினைத்து அஞ்சினர். ஏற்கனவே போர் காரணமாக சிங்கப்பூரில் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதுவும் ஒரு தாக்குதலாக இருக்கக்கூடுமோ என்று பொதுமக்கள் சிலர் அஞ்சிய நிலையில் சிங்கப்பூர் அரசு அதனை முற்றிலும் மறுத்து இது சிங்டெல் நிறுவனத்தின் தனிப்பட்ட சேவை பிரச்சனை என்றும் அதையும் விரைவில் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.