சிங்கப்பூரின் சமூக சேவைகள், உணவு சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்தில் குறிப்பிட்ட 8 வகையான வேலைகளுக்கு வரும் செப்டம்பர் முதல் அதிக நாடுகளைச் சேர்ந்த Work Permit வைத்திருப்பவர்களுக்கு திறக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) அறிவித்துள்ளார். அந்த எட்டு தொழில்கள் என்னென்னவென்றால் : குழந்தை பாதுகாப்பாளர்கள் அல்லது குழந்தை பராமரிப்பாளர்கள், சமூக சேவைகளில் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்கள்; இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் போன்ற உணவு தயாரிப்பவர்கள், உணவு அல்லது குளிர்பானக் கடை உதவியாளர்கள், உணவு சேவைகளில் சமையலறை உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள்; மற்றும் விமான துறையில் கேபின் பணியாளர்கள் என்று மொத்தம் 8 வகையான பணிகளுக்கு இனி Work Permit NTS நாட்டவருக்கு வழங்கப்படும்.

Good news for Indians eager to go to Singapore – Work permits available with a $2000 salary.

NTS என்றால் என்ன? எந்தெந்த நாடுகள் இதன் கீழ் வரும்?

சிங்கப்பூரை பொறுத்தவரை NTS (Non-Traditional Source) கருதும் நடுகள் தான் பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள். இந்நிலையில் இந்த நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களால் நிரப்பக்கூடிய உற்பத்தி மற்றும் சேவை வேலைகளின் பட்டியலில் அந்த 8 பணிகள் இப்போது சேர்க்கப்படும். இது வணிகங்கள் இந்த மூலங்களிலிருந்து குறிப்பிட்ட தொழில்முறை அல்லாத, மேலாளர், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் (PMET) பதவிகளில் உயர்தர தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கும். உள்ளூரில் மேலே குறிப்பிடப்பட்ட பணிகளை பெரிய போதுமான பணியாளர்கள் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று MOM அமைச்சர் டாக்டர் டான் கூறினார்.

உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான சிங்கப்பூரின் பொதுவான தொழிலாளர் ஆதாரங்கள் மலேசியா, சீனா, ஹாங்காங், மக்காவ், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தான். ஆனால் அதன் மூலம் சிங்கைக்கு S Passல் ஊழியர்கள் வரும்போது, அவர்களுடைய தகுதி சம்பளத்தில் வரவிருக்கும் பெரிய மாற்றம் இங்குள்ள நிறுவனங்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சிக்கலை கொடுக்கலாம். ஆகவே அந்த 8 பணிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை தக்கவைக்க இந்த புதிய ஒர்க் பெர்மிட் நடவடிக்கை நிறுவனங்களுக்கு உதவும் என்று MOM செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் இந்த வகை பெர்மிட்டில் வருவோருக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக 2000 வெள்ளி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு வாக்கில், S பாஸ் தகுதி சம்பளம் S$4,000 முதல் S$4,500 வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று MOM அமைச்சர் கூறினார். உள்ளூர் PMET ஊதியங்களில் மூன்றில் ஒரு பங்கின் அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு பாஸ் தகுதி சம்பளம், 2027 முதல் புதிய விண்ணப்பங்களுக்கு S$5,600 இலிருந்து S$6,000 ஆகவும், 2028 முதல் ஏற்கனவே சிங்கப்பூரில் உள்ள S Pass Holders அதை Renewal செய்யும்போது அது கிடைக்கும் என்றும் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த புதிய திட்டம் செப்டம்பர் முதல் அமலாக உள்ள நிலையில் இதை சில வரைமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஒர்க் பெர்மிட்டில் வருபவர்களுக்கு 2000 வெள்ளி அடிப்படை சம்பளம் கொடுக்கவேண்டும். அதே நேரம் ஒரு நிறுவனம் தன்னிடம் உள்ளியர்களின் 8க்கும் சதவிகிதத்தில் மட்டுமே இந்த பணிக்கான ஆட்கள் இந்த புதிய முறை மூலம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆகவே செப்டம்பர் முதல் இந்த புதிய ஒர்க் பெர்மிட் அறிமுகமானாலும் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே இதன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இருப்பினும் சிங்கை வர ஆசைப்படும் இந்தியர்கள், இலங்கை வாழ் ஊழியர்களுக்கு இந்த செய்தி ஒரு நற்செய்தியாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.