மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் காரணமாக ஏற்படக்கூடிய விலை உயர்வை சமாளிக்கும் பொருட்டு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில சலுகைகளை, ஆறு மாதத்திற்கு முன்னதாகவே மக்களுக்கு வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்திருக்கிறது. தேவைப்படும் பட்சத்தில் இன்னும் கூடுதல் நிதி உதவியை அளிக்கவும் சிங்கை அரசு தயாராக இருப்பதாக அமைச்சர்கள் குழு தகவல் வெளியிட்டு இருக்கிறது. தற்பொழுது ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடந்து வரும் போர் காரணமாக உலக அளவில் பல வகையில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எரிபொருள் பிரச்சனையால் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூர் மக்கள் தொடர்ந்து உயரும் விலைவாசியை சமாளிக்க அரசு ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் உதவி திட்டங்களை தற்போது அறிவித்திருக்கிறது. அது குறித்து தெளிவாக இந்த கட்டுரையில் காணலாம்.

CDC வவுசர்

நேற்று நாடாளுமன்றத்தில் கூடிய அமைச்சர்கள் குழு மத்திய கிழக்கு போர்க்க காரணமாக உலக அளவில் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்தனர். “அதே போல அந்த பாதிப்பிலிருந்து நமது சிங்கையால் மட்டும் விலகி நிற்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவுகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதே நேரம் ஒரே மக்களாக ஒரே குடும்பமாக ஒரே நாடாக அனைவரும் இதை எதிர்கொண்டு சமாளிப்போம்” என்று பிரதமர் லாரன்ஸ் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அமைச்சர்கள் குழு வெளியிட்ட தகவலில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில நலத்திட்டங்கள் 2027ம் ஆண்டு நிறைவேற்றப்படவிருந்த நிலையில் தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே அந்த நலத்திட்ட உதவிகளை வெளியிடுவதாக கூறியுள்ளிருக்கின்றார்கள். அதன்படி அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டிய சுமார் 500 வெள்ளி மதிப்பிலான CDC Vouchers 2027ம் ஆண்டு ஜனவரியில் கொடுக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே வருகின்ற ஜூன் 2026லேயே அது வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.

வழக்கம்போல இதற்கென்று எந்த சிங்கப்பூர் குடும்பங்களும் தனியாக எந்தவித விண்ணப்பங்களும் செய்ய தேவையில்லை. இது தானாகவே அவர்களுடைய வங்கிக் கணக்கில் வழக்கம்போல வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் உதவி தேவைப்படுபவர்கள் அருகில் உள்ள நலத்திட்ட மையங்களை அணுகி தங்களுக்கான தொகையைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படும்.

கூடுதல் ரொக்க உதவி

மேலும் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர்கள் சிங்கப்பூரில் “காஸ்ட் ஆப் லிவிங் ஸ்பெஷல் பேமென்ட்” திட்டத்தின் கீழ் தகுதி பெறும் சிங்கப்பூரர்களுக்கு கூடுதலாக 200 வெள்ளி வழங்கவும் முடிவு செய்து இருக்கின்றனர். இதன் மூலம் இந்த செப்டம்பர் 2026-ல் இருந்து சுமார் 2.4 மில்லியன் சிங்கப்பூரில் 400 முதல் 600 வெள்ளிக்கு மிகாமல் உதவித்தொகையை பெறுவார்கள். இந்த உதவி தொகை பெற ஆண்டு வருமானம் ஒரு லட்சம் வெள்ளிக்கு மிகாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு தகுதிகள் உள்ளவர்கள் இந்த சிறப்பு ரொக்க தொகை உதவிக்கு தகுதி பெறுவர்.

போக்குவரத்து துறைக்கான ஆதரவு

இந்த எரிபொருள் பிரச்சனையால் நேரடியாக பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் டாக்ஸி ஓட்டுநர்கள், தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி ஊழியர்கள் என அழைக்கப்படும் Platform Workers தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் 200 வெள்ளி ரொக்க பண உதவி வழங்கவும் தற்பொழுது ஆவணம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் டெலிவரி டிரைவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் இந்த உதவியை பெறுவார்கள்.