சிங்கப்பூரில் வருகின்ற திங்கட்கிழமை ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் நமது MRT -யின் சர்க்ள் லைன் ரயில் பாதையில் புதிய ரயில்களை மக்கள் எதிர்பார்க்கலாம் என்று SMRT நிறுவனம் நேற்று ஏப்ரல் 10ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்த முழு தகவல்களை இப்பொழுது காணலாம்.

New upgraded Circle Line in Singapore – New trains to be introduced from April 13.

சிங்கப்பூர் தொடர்ச்சியாக தன்னுடைய MRT ரயில் சேவைகளை பல இடங்களுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களின் சௌகர்யத்திற்காக தொடர்ச்சியாக பல வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சிங்கப்பூரில் சர்க்கிள் லைன் ஆரஞ்சு நிறமா? அல்லது மஞ்சள் நிறமா? என்கின்ற பிரச்சனை நீண்ட காலமாக நிலவி வந்த நிலையில், தற்பொழுது சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சர்கிள் லைன் ஆரஞ்சு நிற வழிதடத்தில் செயல்படுவதாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஆகவே சர்க்கிள் லைனில் அடையாளமான ஆரஞ்சு நிறத்தை பயன்படுத்தி புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்த உள்ளது. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல சிறப்பு அம்சங்கள் கொண்ட ரயில்களாக வருகின்ற திங்கட்கிழமை ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் இந்த புதிய ரயில்களின் சேவை சர்க்கிள் லைனில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஏப்ரல் 10ம் தேதி தன்னுடைய முகநூல் பதிவில் சில தகவல்களை வெளியிட்ட சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம், வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் புதிய ரயில் சேவைகள் சர்க்கிள் லைனில் துவங்குவது குறித்து அறிவித்தது.

இந்த ரயில்களின் வெளிப்பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் என்றும், உட்புறம் மக்களுக்கு மகிழ்வினை தரும் வண்ணமயமான வடிவமைப்புகளில் இருக்கும் என்றும், ரயில்களில் உள்ள வழித்தட மேப்புகள் மக்களுக்காக புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சர்க்கிள் லைனின் மூன்று புதிய ரயில் நிறுத்தங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், நில போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் புதிதாக களமிறங்கப் போகும் இந்த ரயில்களில் மேம்படுத்தப்பட்ட பல அம்சங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள், ரயிலின் சமநிலை பாதுகாப்பு, ரயில் தண்டவாளங்களின் நிலை ஆகியவை தானாகவே கண்காணிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் LTA தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த புதிய ரயில்கள் சிங்கப்பூர் ரயில் சோதனை மையத்தில் ஏற்கனவே பலமுறை சோதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சர்க்கிள் லைன் 6..!

சிங்கப்பூரை பொறுத்தவரை இந்த 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் Keppel, Cantonment மற்றும் Prince Edward Road என்று மூன்று புதிய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது சர்க்கிள் லைனில் ஆறாவது மற்றும் இறுதி கட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூன்று நிலையங்களும் திறக்கப்பட்டவுடன் Harbour Front மற்றும் Marina Bay ரயில் நிலையங்களுக்கு இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டு சர்கிள் லைன் ஒரு முழுமையான வட்டப்பாதையாக உருமாறும். அதே போல சர்க்கிள் லைனிங் சுரங்கப்பாதை அமைப்பை பலப்படுத்தும் பணிகள் திட்டமிட்டதை விட முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளதால், நேற்று ஏப்ரல் 10ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இந்த மூன்று புதிய நிலையங்கள் திறப்பதற்கான இறுதி கட்ட சோதனைகள் ஏப்ரல் 11 முதல் மே 17 வரை வார இறுதி நாட்களில் நடைபெறும் என்றும், அதனால் அந்த சமயத்தில் ரயில் சேவைகளுக்கான நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் எல்டிஏ அறிவித்திருக்கிறது.