சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஒரு வெளிநாட்டு ஊழியர், தனது இரண்டு ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் தற்பொழுது வென்றிருக்கிறார். ஏற்கனவே அவருடைய வழக்கில் கீழ்நிலை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அந்த வெளிநாட்டு ஊழியருக்கு சாதகமாக சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்து இருக்கிறது. மேலும் அவருடைய முன்னாள் முதலாளிக்கு அபராதமும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை தற்பொழுது காணலாம்.
In Singapore – Indian migrant worker’s 700-day legal battle; judge rules in favour of justice.
சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இந்திய வெளிநாட்டு ஊழியர் தான் Gena Hulash Ram. இவருடைய வழக்கில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. பிலிப் ஜெயரத்தினம், ராம் தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனுவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் Lim Joo Huat Enterprise என்ற நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கான ஓவர் டைம் ஊதியத்தை வழங்கிய விதம் சட்ட விரோதமானது என்று, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அவர் நீதிமன்றத்தின் வாயிலாக சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார். அதாவது ஒரு குறிப்பிட்ட மாதாந்திர கொடுப்பனைவை, கூடுதல் நேர ஊதியத்தை ஈடுகட்ட பயன்படுத்த முடியுமா? முடியாதா? என்பதே இந்த வழக்கின் சாராம்சமாக இருந்தது.
கிட்டத்தட்ட ராமுக்கு வழங்க வேண்டிய 5,700 வெள்ளி ஓவர் டைம் பணத்தை அந்த நிறுவனம் வழங்காமல் அதை மாதாந்திர கொடுப்பனைவோடு ஈடுகட்ட பயன்படுத்தியதாக சுமார் இரண்டு ஆண்டுகளாக சட்ட போராட்டத்தை அவர் நடத்தி வந்துள்ளார். ராமை பொருத்தவரை கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை மேற்கூறிய நிறுவனத்தில் பேக்கராக பணியாற்றி வந்திருக்கிறார். மேலும் அவர் அந்த நிறுவனத்தில் சேரும் பொழுது மனிதவள அமைச்சகம் வழங்கிய IPA எனப்படும் கடிதத்தில் அவரது அடிப்படை சம்பளமானது மாதத்திற்கு 1000 வெள்ளி என்றும், குடியிருப்புக்காக அவருக்கு 200 வெள்ளி மற்றும் இதர காரணங்களுக்காக 300 வெள்ளி என இரண்டு மாதாந்திர கொடுப்பனைவுகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
ஆகவே அவருடைய மொத்த நிலையான மாதாந்திர ஊதியம் 1500 ஆகும். ஆகவே அதன்படி கணக்கிட்டால் அவருடைய கூடுதல் நேர வேலை விகிதம் என்பது மணிக்கு 7.87 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் சட்டப்படி மனிதவள அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இதர மாதாந்திர கொடுப்பனைவில் தான் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அவருடைய ஓவர் டைம் ஊதியம் என்பது அவருக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பணைவிலேயே (500 வெள்ளி) அடங்கிவிடும் என்று முதலாளி வாதிட, இந்த வழக்கை விசாரித்த கீழ்நிலை தீர்ப்பாயமும் அவருக்கு 3000 வெள்ளி மட்டுமே கூடுதலாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து இருந்தது. ஆனால் இதனுடைய மேல்முறையீட்டின் போது உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயரத்தினம், முதலாளியின் வாதத்தை நிராகரித்து கூடுதல் நேர பணி என்பது அடிப்படை கொடுப்பனைவில் சேராது என்றும், அவருக்காக வழங்கப்பட வேண்டிய ஒரு டைம் ஊதியமான 7.87 வெள்ளியை சரியாக கணக்கிட்டு மொத்தமாக அவருக்கு 5711.11 வெள்ளி கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.