சிங்கப்பூரில் மின் சிகரெட் பயன்படுத்தியதாக 25 வயது இளம் பெண் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு ஹோட்டல் அறையில் அவர் இறந்து கிடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருடைய மரணம் குறித்து விசாரணை நடத்த மரண விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் தற்பொழுது Low Hui Mei (லோ) என்ற அந்த 25 வயது பெண்ணின் மரண அறிக்கி வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த மே மாதம் 16ஆம் தேதி சிங்கப்பூரின் Lorong 8 Geylang பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் அவர் இறந்துகிடந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கிய போலீசார் ஊடகங்களுக்கு அளித்த பாதியில் “எங்களுடைய முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணுடைய மரணத்தில் எந்தவிதமான சதியும் இருப்பதாக சந்தேகிக்கவில்லை” என்று கூறியிருந்தனர்.
மேலும் உடனடியாக அவருடைய மரணம் குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் ஏற்கனவே அந்த இளம் பெண்ணின் வழக்கில் வாதாடி வந்த வழக்கறிஞர் தில்லான்.. “மின் சிகரெட் பயன்படுத்திய வழக்கில் கைதாகி விசாரணையில் இருந்த தனது கட்சிக்காரன் லோ, இருதய மற்றும் நுரையீரல் செயல் இழப்பு காரணமாகத்தான் இறந்ததாக” தெரிவித்தார்.
தற்பொழுது மரண விசாரணை ஆணையமும் அந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி சிங்கப்பூரின் கிங் ஜார்ஜ் அவன்யூவில் எண்டோமிடெட் கலந்த மின் மின் சிகரெட் கடத்தியதாக லோ போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து மொத்தமாக 11 மின் சிகரெட்டுகளும் கிட்டத்தட்ட அதனுடைய உதிரிபாகங்கள் 101ம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் பிறகு சிங்கையில் செயல்படும் சுகாதார அறிவியல் ஆணையம் இந்த வழக்கில் நடத்திய சோதனையில் அவர் பயன்படுத்திய மின் சிகரெட்களில் அறுவை சிகிச்சையின் போது நோயாளிகள் மயக்கமுற பயன்படுத்தப்படும் Entomidate என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி லோ மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மீண்டும் அவருடைய வழக்கு கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்தது.
இந்த சூழலில் தான் அவர் ஒரு ஹோட்டல் அறையில் நுரையீரல் மற்றும் இருதய செயல்பாட்டு இழப்பின் காரணமாக இருந்தது தெரிய வந்தது. தற்பொழுது குற்றவாளி இறந்து இருப்பதால் இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காரணம் சிங்கப்பூர் சட்ட திட்டங்களின்படி ஒரு குற்றவியல் வழக்கில் சிக்கி வாதங்கள் நடைபெறும் நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
