சிங்கையில் இந்த வார இறுதியில் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை சாவடிகளில் இருந்து வெளியேற நினைக்கும் மக்கள் வழக்கத்தை விட இரு மடங்கு கூடுதல் நெரிசலை எதிர்பார்க்க நேரிடும் என்று சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் இன்று ஏப்ரல் 2ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.
வருகின்ற மே மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை “உழைப்பாளர் தினம்” கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு என்று நீண்ட வார இறுதி நாட்கள் வருவதால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிக கூட்ட நெரிசல் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் இருக்கும் என்றும், மக்கள் அதற்கு ஏற்றார் போல தங்களுடைய பயணத்திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிங்கபூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையும் இன்று ஏப்ரல் 27ஆம் தேதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருக்கிறது.
வியாழக்கிழமை மாலை முதல் மக்கள் தங்களுடைய பயணங்களை மேற்கொள்ள தொடங்குவார்கள் என்றும், அதனால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு தினங்களும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் என்று இரு வழியிலும் அதிக கூட்ட நெரிசல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் முன்கூட்டியே தங்களுடைய பயணங்களை திட்டுமிடுமாறும், கூட்ட நெருசில் இல்லாத நேரங்களில் மக்கள் பயணம் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அது மட்டும் இல்லாமல் எல்லையை கடக்க நினைக்கும் மக்கள் தங்களுடைய பயண நேரத்திற்கு சற்று முன்னதாக போக்குவரத்து நிலையை ICA-வின் அதிகார பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதே ஏப்ரல் மாதத்தின் 3 முதல் 5ம் தேதி வரை புனித வெள்ளியை முன்னிட்டு ஒரு மிக நீண்ட வார இறுதி நாட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வார இறுதியில் மட்டும் கிட்டத்தட்ட 14 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் woodlans மற்றும் துவாஸ் சோதனைச் சாவடி கடந்ததாக ஐசிஏ அதிகாரிகள் தரவுகளை வெளியிட்டு இருக்கின்றனர்.
அது மட்டும் அல்லாமல் Peak Hours-களில் மலேசியாவில் இருந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் காரணமாக காரில் செல்லும் பயணிகள் அவர்களுடைய குடிநுழைவு சோதனைகளை முடிக்க மட்டும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் ஆனது என்றும் ஐசிஏ தகவல் தெரிவித்து இருக்கின்றது. அதேபோல தற்பொழுது உலக அளவில் நடந்து நிலவிவரும் ஒரு பாதுகாப்பற்ற சூழலை கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் சோதனைச் சாவடிகளில் பயணிகளின் சரக்கு வாகனங்கள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் அதன் மூலமும் காத்திருப்பு நேரம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றது.
மேலும் வாகனங்களில் பயணிக்கின்றவர்கள் ஐசிஐ அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், லேன்களை மாற்றி மற்றவர்களுக்கு இடையூறு செய்து தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளாமல் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். எல்லையை கடக்க விரும்பும் பயணிகள் தங்களுடைய பாஸ்போர்ட், எஸ்ஜி அரைவல் கார்ட், க்யூ ஆர் குறியீடு உள்ளிட்டவற்றை மறக்காமல் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்றும் Woodlands சோதனை சாவடியில் தற்பொழுது நடந்து வரும் சீரமைப்பு பணிகள் காரணமாக தங்களுடைய பயணத்தின் போது மிகவும் கவனத்துடன் செயல்படுமாறும் ஐசிஏ அறிவுறுத்தி இருக்கிறது.