நேற்று ஏப்ரல் 28ம் தேதி பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக சிங்கப்பூர் வந்திருந்த திரு. Jean Didier Berger பேசுவையில் சிங்கப்பூரும் பிரான்ஸ் நாட்டு அரசும் ஏற்கனவே உள் பாதுகாப்பு தொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் கீழ் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை இன்னும் ஆழமாக அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் மோசடிகளை கையாளுதல் மற்றும் இளைஞர்களுக்கான சமூக ஊடக ஒழுங்குபடுத்துதல் போன்ற பகுதிகளிலும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாற்றிக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

நேற்று ஏப்ரல் 28ஆம் தேதி நமது சங்கை உள்துறை அமைச்சகத்தின் தலைமையின் கீழ், பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகமும் இணைந்து Milipol TechX Sunmit 2026 என்ற மாநாட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் கலந்துகொண்டு தான் அந்நாட்டு உள்துறை அமைச்சக பிரதிநிதி Berger அவர்கள் தன்னுடைய உரையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சந்திப்பின்போது நமது உள்துறை அமைச்சருமான திரு. சண்முகம் அவர்களும் உடன் இருந்தார். அவருடனும் பிரான்ஸ் நாட்டில் அதிகாரிகள் கலந்தாய்வு நடத்தினர்.

மேலும் சிங்கப்பூரின் ஆயர் ராஜா கிரசன்ட்டில் உள்ள பிரெஞ்சு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான தேல்ஸ் மையத்திற்கு இருநாட்டு அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பின் ஊடகங்களிடம் பேசிய திரு பெர்கர், “பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு போதைப்பொருள் கடத்தல் மற்றும் ட்ரோன் பயன்பாடு போன்ற பல பகுதிகளில் ஏற்கனவே சிங்கை மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு இடையே உள்ள கூட்டான்மையை இன்னும் வலுப்படுத்த உள்ளதாகவும். அதற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும்” அவர் கூறினார்.

“நாங்கள் ஆர்வமாக இருக்கும் சில குறிப்பிட்ட விஷயங்களில் ஏற்கனவே சிங்கப்பூர் எங்களை விட மிக நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே பாதுகாப்பு துறையில் வளர்ச்சி பெற்று இருக்கும் சிங்கப்பூருக்கு அவர்களுக்கு விருப்பமான சில விஷயங்களை வழங்கவும் பிரான்ஸ் நாடு ஆர்வமாக இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார். உதாரணமாக சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடிகள் குறித்து இப்பொழுது நாங்கள் அதிக ஈடுபாடு காட்டி வருகிறோம் இதிலிருந்து சிங்கப்பூர் கற்றுள்ள விஷயங்களை கேட்டறிந்து நாங்களும் அதை எங்கள் நாட்டில் செயல்படுத்த ஆயத்தமாய் இருக்கிறோம் என்றார் அவர். எப்பொழுதுமே நாம் குற்றவாளிகளை விட ஒரு படி மேலே இருக்க சட்டங்களை அதற்கு தகுந்தார் போல கடுமையாக்குவது நிச்சயம் பலனளிக்கும் என்றும் அவர் கூறினார்.