சிங்கப்பூரும் அதன் மக்களும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார் நமது சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் முன்னாள் பிரதமருமான லீ சியன் லூங். மாறிவரும் உலகில் இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்பதால் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களும் சரி, அல்லது இங்குள்ள தனி நபர்களும் சரி அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவர்களின் தற்போதைய வேலைகள் பறிபோகும் பட்சத்தில் செயற்கை நுண்ணறிவிலான பொருளாதாரத்தில் புதிதாக ஏதோ ஒரு விஷயத்தை செய்யக்கூடியவர்களாக அவர்கள் மாறியே ஆக வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
“Growth of AI… We must adapt to this change,” says Singapore’s senior minister.
நேற்று மே 22 ஆம் தேதி சீனாவின் ஹாங்காய் மற்றும் குவாங்சி ஆகிய இடங்களுக்கு தன்னுடைய ஐந்து நாள் அரசு முறை பயணமாக சென்ற அமைச்சர் லி தன்னுடைய பயணத்தை நிறைவு செய்தார். அதன்பிறகு பொருளாதார உத்தி ஆய்வு மற்றும் நமது எதிர்கால மீள்திறன் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போதுதான் அவர் சில பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். முதலில் தன்னுடைய சீன பயணம் குறித்து விவரித்து அவர் அதன் பிறகு செயற்கை நுண்ணறிவின் தாக்கமும் அதுபற்றி நமக்கான புரிதலும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி இருந்தார்.
“செயற்கை நுண்ணறிவு என்பது நாம் திட்டமிட்டதை விட மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகின் பல நாடுகளில் மனிதன் வாழும் வாழ்க்கையும் அவர்கள் செய்யும் வேலை முறையையும் அது ஒட்டுமொத்தமாக மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மனிதர்களும் வளங்களும் தேவைப்படும் பணிகளை தாங்களாகவே செய்வதன் மூலம் அது நமது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். அதேபோல இதில் செயற்கை நுண்ணறிவு இணையும் பொழுது அதனுடைய பலன் இன்னும் அதிகமாக இருக்கிறது. என்னதான் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தாலும் அது ஊழியர்களின் தனிப்பட்ட அல்லது சமூக வளர்ச்சிக்கு தான் பயன்பட வேண்டும் என்றும், இதனால் வேலை இழப்பு விகிதம் அதிகரிக்க கூடாது” என்றும் அவர் கூறினார்.
சீனா தனது நகர்ப்புற மேம்பாடு மற்றும் சேவைகளை நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது என்பதையும், அதே நேரம் அதனால் ஏற்படும் சவால்களை எப்படி கையாளுகிறது என்பதையும் குறித்த அணுகுமுறையை தான் நேரில் கண்டது பிரமிப்பை கொடுத்ததாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார். மற்ற நாடுகளும் குறிப்பாக சீனாவும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் எவ்வளவு வேகமாக வளர்கிறது என்பதை என் கண்கூடாக பார்த்திருக்கிறேன் ஆகவே இதைப்பற்றி படிப்பது என்பது வேறு விஷயம் ஆனால் இதை அன்றாட வாழ்க்கையில் அனுபவித்து பயன்படுத்தி வாழும் மக்களுடன் பேசுவது என்பது முற்றிலும் மாறுபட்ட விஷயமாகும்.
இதிலிருந்து சிங்கப்பூருக்கான பாடமாக நான் கருதுவது என்னவென்றால் நாம் இன்னும் முன்னோக்கி செல்ல வேண்டும், பிற நாட்டு மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், பிறரோடு இணைந்து ஒன்றாக செயல்பட வேண்டும். மேலும் பிறரால் செய்ய முடிந்ததை செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்று சிங்கப்பூறும் செய்ய வேண்டும். ஆனால் அதில் சில சவால்கள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் இதை நான் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று கூறினார்.
