கடந்த மே மாதத்தில் தொடர்ச்சியாக இரண்டு கட்டுமான தலங்களில் நடைபெற்ற விபத்தில், ஒரு வெளிநாட்டு ஊழியர் உட்பட இருவர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து தன்னுடைய சோதனையை நடவடிக்கைகளை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மே 29ஆம் தேதி தாம்சன் கிரீன் பகுதியில் உள்ள இரண்டு அடுக்குமாடி வீட்டு கட்டுமான தளத்தில் மேற்கொண்ட பாதுகாப்பு சோதனையில் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடுமையான அபாயத்தை உண்டாக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மனிதவள அமைச்சகம் கண்டுபிடித்து இருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனித உள்ள அமைச்சக அதிகாரிகள் “நாங்கள் ஆய்வு செய்த அந்த கட்டுமான தளத்தில் பாதுகாப்பு அரண்கள் இல்லாத திறந்தவெளிகள் பல இருப்பதும், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் இயந்திரங்கள் இல்லாமல் ஊழியர்கள் பணியாற்றி வந்ததும், நெரிசலான நடை பாதைகள் போன்ற குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்தது. இது மட்டுமல்லாமல் அவசர காலத்தில் பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவதற்கு சரியான வழிகளும் அங்கு அமைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. தற்பொழுது அந்த கட்டுமான பகுதியில் ஒரு மாடியும் கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த மாடியை ஊழியர்கள் சென்றடையவும் சரியான ஏணி வசதிகள் அமைக்கப்படவில்லை என்றும், அதில் கால் வைத்து ஏறக்கூடிய இடம் மிகவும் குறுகலாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மனிதவள அமைச்சகத்தின் தொழிற்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வகத்தின் இயக்குனர் Audrina Chua செய்தியாளர்களிடம் பேசுகையில்.. “குறிப்பிட்ட அந்த கட்டுமான தளத்தில் நாங்கள் கண்டறிந்துள்ள இந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கட்டாயம் அமலாக்க நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். மேலும் நாங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு இணங்காதவர்களுக்கு முதலில் அறிவிப்புகள் முறையாக வழங்கப்படும். ஒருவேளை அதிலும் தங்களை திருத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோல அந்த இடங்களில் கட்டுமான பணிகளை மீண்டும் அந்த நிறுவனம் தொடங்குவதற்கு முன்னதாகவே அதில் உள்ள அபாயங்களை அந்த கட்டுமான தளத்தின் ஒப்பந்ததாரர் கட்டாயம் சரி செய்ய வேண்டும்”.
“அந்த ஒரு நிபந்தனையுடன் தற்காலிகமாக வேலையை நிறுத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்படும். தொழிலாளர்கள் மற்றும் அந்த தளத்தின் திட்ட மேலாளருக்கு உரிய பாதுகாப்பு பயிற்சிகள் தேவைப்படும் என்று மனிதவள அமைச்சகத்திற்கு தெரிய வந்தால் கட்டாயம் அதற்கான அறிவுரைகளும், பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க அனைத்து வகையான முடிவுகளும் எடுக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் ஊழியர்களுக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்றார் அவர்.
கடந்த வெள்ளிக்கிழமை மே 29ஆம் தேதி சிங்கையின் முக்கிய பகுதியில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு கட்டுமான துறையில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தும் ஒரு நோக்கத்தில் செய்யப்பட்டது என்றும், மே மாத தொடக்கத்தில் கட்டுமான தளங்களில் இரண்டு ஊழியர்கள் இறந்ததை தொடர்ந்து கடந்த மே 20 ஆம் தேதி முதல் ஜூன் 3 வரை கட்டுமானத்துறை முழுவதும் தன்னார்வ பாதுகாப்பு இடைவெளியை (பாதுகாப்பு இடைவெளி) எடுக்குமாறு கடந்த மே 19ஆம் தேதி மனிதவள அமைச்சகம் மற்றும் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவுன்சில் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கட்டிடங்களை இடிக்கும் பணியின் பொழுது மேலிருந்து விழுந்த காங்கிரீட் பகுதி தாக்கி ஒரு தொழிலாளி உயிரிழந்திருக்கிறார். மற்றொரு சம்பவத்தில் ஒரு திட்ட மேலாளர் மேற்கூரை அமைப்பு சரிந்து விழுந்ததில் அவர் மேல் செங்கற்கள் விழுந்து இறந்து இருக்கிறார். கட்டாயம் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக செய்திருந்தால் இந்த இரண்டு மரணங்களையும் தடுத்திருக்க முடியும் என்று மனிதர்கள் அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. அதேநேரம் இந்த பாதுகாப்பு இடைவெளி என்பது பணியிடத்தில் தொடர்ச்சியாக மரணங்கள் அல்லது விபத்துகள் ஏற்படும் பொழுது உடனடியாக பணிகளை நிறுத்திவிட்டு அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய கொடுக்கப்படும் நேரம் தான் என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் மிகச் சிறந்த செயல்பாடுகளை கொண்டிருப்பதால் பணியிட விபத்துகள் குறைந்து வந்தன, ஆனால் மே மாத துவக்கத்தில் நடந்த இரண்டு சம்பவங்களும் எங்களை கவலை அளிக்க செய்திருப்பதாகவும் மனிதவள அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
