கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் நாட்டில் தொடங்கப்பட்ட போர் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தையும் கடந்து நடந்து வருகிறது. இது உலக அளவில் பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மக்களுக்கு மிக மிக அத்தியாவசியமாக மாறி உள்ள எரிபொருள் பிரச்சனையினால் உலக அளவில் பல நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு சிங்கப்பூரும் விதிவிலக்கல்ல, காரணம் சிங்கப்பூர் தனது எரிசக்தியில் கிட்டத்தட்ட 90க்கும் அதிகமான சதவீதத்தை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரான் போர்காரணமாக எரிசக்தி செலவுகள் பெரிய அளவில் அதிகரித்து சிங்கப்பூரின் அன்றாட வாழ்க்கையில் அது பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
Impact of the Iran war – What sectors are affected in Singapore?
உலக அளவில் சில நாடுகள் இந்த எரிபொருள் பிரச்சனையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது குறிப்பாக இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை “Work From Home” முறையில் பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை எந்தவித அரசகால நடவடிக்கையோ நல்லது வீட்டில் இருந்து வேலை செய்யும் உத்தரவுகளோ இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் மக்கள் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் நல்லது என்று அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த எரிசக்தி பிரச்சனையால் சிங்கப்பூரில் பொருளாதாரம் ஒரு சிறிய அளவில் பாதிப்பை கண்டு வருகிறது.
இது குறித்து தனியார் நிறுவன பணியாளர் ஒருவர் பேசுகையில் சிங்கப்பூரில் இப்பொழுது பல பொருள்களின் விலை உயர்ந்து வருவதாக கூறினார். குறிப்பாக கடந்த ஏப்ரல் 1 முதல் மின்சார கட்டணங்கள் அதிகரித்து இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் அது இன்னும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர். சமையல் எரிவாயு விலையும் சிங்கப்பூரில் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஆனால் எரிவாயு விலை ஏற்றம் அடைந்தாலும் அதன் விநியோகத்தில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார். டாக்ஸி மற்றும் தனியார் வாடகை வாகனங்களில் கட்டணங்கள் இந்த எரிபொருள் பாதிப்பால் கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக கட்டுமான மற்றும் போக்குவரத்து துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் டீசல் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
ஒரு லிட்டர் டீசல் சாதனையாளவாக கிட்டத்தட்ட 4.43 வெள்ளிக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது சிங்கப்பூரில் விற்பனையாகி வரும் பிரீமியம் பெட்ரோலின் விலையை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இந்த எரிபொருள் விலையேற்றத்தால் விமானம் மற்றும் படகு சவாரியில் கூட சில விலை மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய டிக்கெட் விலையை சற்று உயர்த்தியுள்ளது. ஆனால் பெரிய நிறுவனங்கள் இந்த விலையேற்றத்தை சமாளிக்க ஏற்கனவே தயாராகி இருப்பார்கள் என்றாலும் கூட, சிறு மற்றும் குறு வணிகர்கள் இந்த எரிபொருள் பிரச்சனையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் உள்ளூர் காய்கறி உற்பத்தியாளர்கள் காய்கறி விலை விரைவில் 10 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று கூறியிருப்பதும் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.