சிங்கப்பூர் மக்கள் மற்றும் இங்கு பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் புதிய வகை மோசடி ஒன்று வலம் வந்து கொண்டு இருப்பதாக பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதாவது சட்டபூர்வமான நடவடிக்கைகள் உங்கள் மேல் எடுக்கப்பட உள்ளது, அவற்றை தவிர்ப்பதற்காக ஒரு வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டும் என்று கூறும் போலி நீதிமன்ற உத்தரவுகள் தற்பொழுது மக்கள் மத்தியில் அதிவேகமாக பரவி வருவதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

A new type of scam is spreading in Singapore – This time using the names of courts; police issue a warning.

சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த சில காலமாகவே பல வகையில் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த சூழலில் நமது சிங்கப்பூர் நீதிமன்றங்கள் பெயரிலேயே போலி உத்தரவுகள் தற்பொழுது இணையத்தில் வலம் வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். அதன்படி உங்கள் மேல் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அந்த சட்டபூர்வ நடவடிக்கை உங்கள் மேல் எடுக்காமல் இருக்க ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கு நாங்கள் சொல்லும் பணத்தை மாற்றுங்கள் என்று கூறி சிங்கப்பூர் நீதிமன்றங்கள் பெயரில் சிலர் போலியான உத்தரவுகள் தற்பொழுது பொதுமக்களுக்கு அனுப்பப்படுகிறது.

குறிப்பாக whatsapp போன்ற மெசேஜ் செயலிகளிலும் அல்லது ஒருவரின் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமாகத்தான் இந்த போலியான தகவல்கள் பரிமாறப்படுகிறது. பரிமாறப்படும் இந்த போலி மின்னஞ்சல்கள் அச்சுஅசலாக அரசு நிறுவனத்தின் லோகோக்களை (Logo) பயன்படுத்துவது மக்களை எளிமையாக ஏமாற்றக்கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் உச்ச நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மாநில நீதிமன்றங்களாக இருந்தாலும் சரி அல்லது பிற குடும்ப நீதி நீதிமன்றங்களாக இருந்தாலும் சரி தங்களுடைய கோப்புகளை எந்த ஒரு காலத்திலும் whatsapp மூலமாகவோ அல்லது டெலிகிராம் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட மின்னஞ்சல் வழியாகவோ அனுப்புவதில்லை.

மேலும் அதில் ஒரு தனிப்பட்ட பிரத்தியேக க்யூ ஆர் கோடு (QR CODE) இருக்கும். அதை ஸ்கேன் செய்தால் அந்த வழக்கு சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த வகையில் தான் சிங்கப்பூர் நீதிமன்றம் தனக்கான கருத்துக்களை அல்லது ஆவணங்களை வெளியிடுகிறது. மாறாக தொலைபேசி மூலமாகவோ whatsapp மூலமாகவோ அல்லது telegram மூலமாகவோ இல்லை மின்னஞ்சல் மூலமாகவும் ஒருபோதும் செய்திகளை நாங்கள் அனுப்புவதில்லை அதனால் அரசின் முறையான க்யூ ஆர் கோடு இல்லாத மற்ற போலியான ஆவணங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதுபோன்று ஆவணங்களை நம்பி தங்களுடைய வங்கி தரவுகளையும் பாஸ்வேர்டுகளையும் கொடுக்க வேண்டாம் என்றும் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மற்றும் போலீசார் எச்சரித்திருக்கின்றனர்.

ஒருவேளை இது போன்ற மோசடியை இங்குள்ள பொதுமக்களோ அல்லது வெளிநாட்டு ஊழியர்களும் எதிர்கொள்ள நேரிட்டால் சற்றும் யோசிக்காமல் சிங்கப்பூரின் ஸ்கேன் சீல்டு உதவி எண்ணுக்கு உடனடியாக அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சிங்கப்பூரில் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டில் 27.6 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து மக்கள் இந்த போலி ஆசாமிகளுக்கு எதிராக போராட அரசுக்கு உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது..