சிங்கப்பூரில் இளைஞர்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்கும் பொருட்டு நமது அரசு ஒரு முக்கியமான மற்றும் அவசியமான முடிவை எடுத்திருக்கிறது. வருகின்ற மே மாதம் 1ம் தேதி முதல் கடுமையான சில திட்டங்கள் இங்கு அமலுக்கு வருகின்றது. இது குறித்து நேற்று மார்ச் 6ஆம் தேதி ஒரு மிக முக்கியமான தகவல் வெளியாகி இருக்கிறது. இனி சிங்கப்பூரில் வெப் எனப்படும் மின் சிகரெட் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க இதற்கு முன்னதாக அமலில் இருந்த தண்டனைகள் பத்திலிருந்து முப்பது மடங்கு வரை அதிகரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை மின் சிகரெட் பயன்படுத்துவதை புகையிலை தடுப்பு சட்டத்தின் வைத்திருந்த சிங்கை அரசு, அதன் தீவிரத்தை உணர்ந்து அண்மையில் தான் அதனை போதைப்பொருள் வழக்காக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Fines increase 30 times – Strict law with jail and caning to take effect in Singapore from May 1.

இந்நிலையில் சிங்கப்பூரில் மின் சிகரெட் பயன்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 10,000 சிங்கை வெள்ளி வரை அபராதம் விதிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சிங்கைக்குள் அதனை விற்பனை செய்பவர்களுக்கு 2 லட்சம் வெள்ளியும், அதை சிங்கைக்குள் கடத்துபவர்களுக்கு மூன்று லட்சம் வெள்ளியும் அபராதம் விதிக்கப்படும் என்று சிங்கை அரசு எச்சரித்து இருக்கிறது. இளைஞர்களை இந்த தொழிலில் ஈடுபட வைக்கும் ஆசாமிகள் யாராக இருந்தாலும் அவர்களுடைய குற்றம் நிரூபணமானால் 20 ஆண்டுகால சிறைவாசமும் அல்லது பதினைந்து புறம்படிகளும் பெற நேரிடும் என்று சிங்கை போலீசார் எச்சரித்து இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க தங்கள் வீடுகளிலோ அல்லது பொது வெளியிலோ இளைஞர்கள் யாரும் இந்த மின் சிகரெட் பயன்படுத்தக்கூடாது என்றும் மீறி பயன்படுத்துபவர்களை கண்டும் காணாமல் செல்பவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.

நேற்று மார்ச் 6ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டங்கள் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டில் இருந்து சிங்கப்பூர் அரசு தொடர்ச்சியாக இந்த மின் சிகரெட் பயன்பாட்டை சிங்கை முழுவதும் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏனென்றால் பிற மதுபானங்கள் போல அல்லாமல், இந்த மின் சிகரெட்களில் பல சமயங்களில் எண்டோமிடெட் என்கின்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு மயக்கம் வர செலுத்தப்படும் ஒருவகை வேதிப்பொருள் தான் இந்த என்டோமிடெட் ஆகையால் இந்த என்டோமிடெட் கலந்த மின் சிகரெட்டுகளை பயன்படுத்தும்பொழுது காலப்போக்கில் இளைஞர்கள் அதற்கு பெரிய அளவில் அடிமையாகின்றனர்.

இதனால் தங்கள் குடும்பத்தையும் சுய கௌரவத்தையும் மறந்து பல தவறான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதால் இதனை முற்றிலும் ஒழிக்க அரசு தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு சிங்கை இளைஞர் ஒருவர் தன்னுடைய தாய் மின் சிகரெட் வாங்க காசு தரவில்லை என்கின்ற கோவத்தில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள துணிந்ததும், தனது தாயை தாக்க துணிந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆகவே இளைஞர்களுடைய எதிர்காலம் இந்த மின் சிகரெட்கள் மூலம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று உணர்ந்துள்ள சிங்கை அரசு தற்போது இதனை இரும்பு கரம் கொண்டு அழித்துவருகிறது.

சிங்கப்பூருக்குள் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படும் அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் மின் சிகரெட் வராமல் இருக்கவும் ஐசிஐ மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு தினங்களுக்கு முன்பு கூட சீனாவில் இருந்து சிங்கப்பூர் வந்த சிலர் இந்த Vapes=களை கடத்த முயன்று ஐசிஐ அதிகாரிகளிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.