மத்திய கிழக்கில் தொடர்ந்து நலவி வரும் போர் பதற்றம் காரணமாக அங்கு தங்கியுள்ள உள்ள பல நாட்டு மக்கள் இப்போது மீண்டும் தங்களுடைய தாயகத்திற்கு திரும்பி வருகின்றனர். ஆனால் மத்திய கிழக்கில் உள்ள சவுதி அரேபியா, துபாய் மற்றும் ஓமன் போன்ற நாடுகளின் விமான நிலையங்கள் பல இன்னும் சீரான விமான சேவையை வழங்க முடியாததால் அவர்கள் தாயகம் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகின்றது. இந்த சூழலில் நமது சிங்கிய அரசு அதன் விமானப்படைக்கு சொந்தமான ஏ330 MRTT என்கின்ற விமானம் மூலம் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் இருந்து 218 சிங்கப்பூரர்களை இன்று தாயகம் அழைத்து வந்திருக்கிறது. நேற்று மார்ச் 10ஆம் தேதி இந்த விமானம் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட நிலையில் தற்போது வெற்றிகரமாக தன்னுடைய பயணத்தை அந்த விமானம் முடித்துள்ளது.
“Singapore Air Force soldiers arrived like angels” – Singaporeans expressed emotional thanks.
மீண்டும் நாளை மார்ச் 12ஆம் தேதி மற்றொரு மீட்பு நடவடிக்கைக்காக மற்றொரு விமானம் சவுதி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் “போர் மேகங்கள் சூழ்ந்து இருந்த வானத்தின் வழியே சவுதியின் ரியாத் பகுதியில் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த எங்களை காப்பாற்றுவதற்காக தேவ தூதர்கள் போல சிங்கை விமானப்படை அனுப்பிய விமானப்படை வீரர்கள் வந்தார்கள்” என்று மிகவும் நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலதி என்கின்ற சிங்கப்பூரார். இன்று புதன்கிழமை காலை சாங்கி விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தில் இந்த விமானம் தர இயங்கியதும் அங்கு காத்திருந்த சொந்தங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு தங்கள் உறவினர்களை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்ததோடு, அவர்களை பத்திரமாக அழைத்து வந்த அனைத்து சிங்கப்பூர் விமானப்படை வீரர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரியாத்தில் இருந்து வந்த சிங்கப்பூரார் ஒருவர் “நமது விமானப்படை வீரர்கள் ஏதோ மீட்பு பணியில் ஈடுபடுகிறோம் என்று இல்லாமல், நாங்கள் அந்த விமானத்தில் ஏறியதில் இருந்து இங்கு வந்து இறங்கியது வரை தங்களுடைய சொந்த உறவினர்களைப் போல எங்களை பாதுகாத்து அன்போடு அனுசரணியாக அழைத்து வந்தார்” என்று கூறியுள்ளார். இந்த மீட்பு விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணி அளவில் ரியாத்தில் இருந்து சிங்கைக்கு புறப்பட்டது. அதேபோல மத்திய கிழக்கின் பிற பகுதிகளான பக்ரைன், குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள இன்னும் பல சிங்கப்பூரர்களை மீட்டு வரவும் மற்றொரு ராணுவ விமானம் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நமது விமானப் படையின் வெற்றிகரமான இந்த செயலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நமது பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில்.. சிங்கப்பூர்களை அழைத்து வர ஏற்கனவே சில வணிக ரீதியான விமானங்கள் நமது அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பல இடங்களில் அந்த வணிக விமானங்களால் செல்ல முடியாத காரணத்தினாலேயே நமது விமானப்படை அதிரடியாக தன்னுடைய போர் விமானத்தை இந்த மீட்பு பணியில் பயன்படுத்தியதாக அவர் கூறியிருக்கிறார். அதே நேரம் இந்த மீட்பு பணியில் நமது சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு அனைத்து விதத்திலும் மிக மிக உதவியாக இருந்த அரேபியா மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதே நேரம் அங்கிருந்து வர முடியாமல் இருக்கும் சிங்கப்பூரர்கள் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், நமது வெளியுறவுத்துறை அமைச்சகம் உங்களுக்கு உதவ 24 மணி நேரமும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் அந்தந்த நாட்டு அரசு கொடுக்கும் முறையான வழிமுறைகளை பின்பற்றி மக்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.