சிங்கப்பூர் அரசு அண்மையில் மின்சார வாகனத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வண்ணம் ஒரு அதிரடி அறிவிப்பை வழங்கியது. அதன் மூலம் நேற்று ஜூன் 15ஆம் தேதி முதல் அந்த புதிய விதி அமலுக்கு வந்தது. அதன்படி சிங்கப்பூரில் உள்ள கிளாஸ் 3 மற்றும் 3A ஓட்டுநர் உரிமம் உள்ள வாகன ஓட்டுனர்கள் அனைவரும் 3000 கிலோவிற்கு மிகாமல் எடையுள்ள அனைத்து மின்சார இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் மேற்கூறிய எடைக்கு மிகாமல் இருக்கும் மின்சார பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுகின்றனர் என்று நமது சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை அறிவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த வரம்பு 2500 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற 2040 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுமைக்கும் தூய்மையான எரிசக்தி வாகனங்களுக்கு மாற அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதை ஆதரிக்கவே இந்த வகையான மாற்றங்களை தற்பொழுது போக்குவரத்து போலீசார் செய்து வருகின்றனர். இதுகுறித்து நேற்று முன்தினம் ஜூன் 14ஆம் தேதி போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கிட்டத்தட்ட 3000 கிலோ வரை எடையுள்ள இத்தகைய வாகனங்களை கிளாஸ் 3 மற்றும் கிளாஸ் 3a உரிமம் பெற்றவர்கள் சிறப்பான முறையில் பாதுகாப்பாக இயக்க முடியும் என்று நாங்கள் நம்புவதாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.

காரணம் இவற்றினுடைய அளவுகள் 2500 கிலோவிற்கு மிகாமல் எடையுள்ள வழக்கமான எரிபொருளில் இயங்கும் வாகனங்களை போலவே அமைக்கப்பட்டு இருப்பதால் இது அவர்களுக்கு பெரிய சிரமமாக இருக்காது என்று விளக்கம் கொடுத்துள்ளனர். அதேநேரம் தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் கார்கள் வழக்கமான எரிபொருள் வாகனங்களாகவே கருதப்படும் என்றும் மின்சார சக்தியில் இயங்கும் இலகர சரக்கு வாகனங்கள் மற்றும் அதே எடையை ஒத்து உள்ள சிறிய பேருந்துகள் அதன் உள்ளே பொருத்தப்பட்டு இருக்கும் பேட்டரியின் காரணமாக வழக்கமான எரிபொருள் வாகனங்களை விட 400 முதல் 500 கிலோ வரை எடை கூடுதலாக இருக்கின்றன என்பதையும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த வாகனத்தின் பேட்டரிகள் பொதுவாக அதன் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டு இருப்பதால் அது வாகனத்தின் மையப்பகுதியை இன்னும் வலுப்படுத்தி வாகனத்தை நிலையாக செயல்படுத்த அனுமதிக்கிறது அதனால் தான் தற்பொழுது கிளாஸ் 3 மற்றும் 3A உரிமம் உள்ளவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டு இருக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் தற்பொழுது சிங்கப்பூரில் கிளாஸ் 3 மற்றும் 3ஏ லைசன்ஸ் உள்ளவர்கள் இந்த புதிய மாற்றத்திற்கு தானாகவே தகுதி பெறுவார்கள் என்றும் இதற்காக அவர்களுடைய ஓட்டுனர் உரிமத்தில் எந்த விதமான மாற்றதல்களையோ அல்லது கூடுதல் ஒப்புதல்களை பெற தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் புதிய 3000 கிலோவிற்கு அதிகமான ஏடை கொண்ட மின்சார வாகனங்களை இயக்குவதற்கு கிளாஸ் 4 அல்லது அதற்கு மேல் உள்ள உரிமம் தேவைப்படும் காரணம் அந்த வாகனங்களை கையாளும் குணம் வேறுவிதமாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.