சிங்கப்பூரில் பணத்தின் மதிப்பு அதிகம் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நான்கு சீன நாட்டு நபர்கள், ஒரு திட்டத்தை தீட்டி பெரிய அளவில் கொள்ளையடிக்க எண்ணி சிங்கப்பூருக்கு வந்திருக்கின்றனர். பொது இடங்களில் மக்கள் கவனக்குறைவாக தவறவிடும் பைகளை திருடி, அதில் இருக்கும் பொருள்களை வைத்து பணம் சம்பாதிப்பது தான் இவர்களுடைய திட்டம். ஏனெனில் சீன நாணயத்திற்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் விகிதம் இப்பொழுது பெரிய அளவில் உயர்ந்து வருவது, தங்களை விரைவில் பணக்காரர்களா ஆக்கும் என்கின்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்பட்டு இருக்கின்றனர்.
அதன்படி நான்கு சீன நாட்டவர்கள் சிங்கப்பூருக்கு வந்து இங்கு தங்களுடைய கைவரிசையை காட்டியுள்ளனர். அதில் அவர்களுக்கு 100 வெள்ளி ரொக்க பணமும், ஒரு பர்ஸ், ஒரு சாவிக்கொத்து மற்றும் ஒரு NRIC அடையாள அட்டையும் கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் தான் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ரகசியமாக போலீசார் ஆய்வு நடத்த தொடங்கினர்.
இந்த விசாரணையில் திருட்டு வழக்கு சம்பந்தமாக இரு சீன நாட்டவர்கள் கைதாகினர், பின் நேற்று ஜூன் 15ஆம் தேதி நான்கு பேர் கொண்ட அந்த கும்பலைச் சேர்ந்த யூ ஹைபோ என்ற 50 வயது நபரும், ஜாங் வெய் என்ற 44 வயது நபரும் தாங்கள் செய்த திருட்டு குறித்து சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர். விசாரணையின் இறுதியில் இந்த அனைத்து விஷயங்களுக்கும் மூளையாக செயல்பட்ட யூ-வுக்கு நான்கு மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதே நேரத்தில் ஜாங்கிற்கு இரண்டு மாதங்கள் மற்றும் ஆறு வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. போலீசாரின் தொடர் விசாரணையில் யூ தான் இந்த திட்டத்தை முழுமையாக தீட்டி ஜாங்கை தனது கும்பலில் சேர்த்ததாகவும். அதனால் யூ தான் இந்த அனைத்து திருட்டுக்கும் பொறுப்பாளி என்று அரசு திறப்பு அவருக்கு அதிக தண்டனையை வழங்கி இருக்கிறது. இந்த 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீன நாட்டவரான யூ, பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து அங்கு சாலைகளில் மக்கள் கவனிக்காமல் விட்டு விட்டுச் செல்லும் பைகளில் இருந்து பணத்தை திருடும் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்.
அதை வெற்றிகரமாகவும் சில நாடுகளில் செயல்படுத்தி வந்திருக்கிறார். இந்த திட்டத்தை சிங்கப்பூரில் செயல்படுத்துவதற்காக தான் ஜாங்கை தன்னுடைய கும்பலில் அவர் சேர்த்திருக்கிறார். பின் ஜாங்க் மூலம் ரென் மற்றும் சுய் ஹைபோ என்ற மேலும் இரு 40 வயது சீன நாட்டவர்கள் இந்த திட்டத்தில் இணைந்திருக்கின்றனர். இறுதியாக இந்த திட்டத்தில் இணைந்த இருவர் மீதும் இன்னும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த இருவரும் முறையே (இன்று) ஜூன் 16 மற்றும் ஜூன் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
