சிங்கப்பூரில் Bigamy என்று அழைக்கப்படும் இருதார மனம் செய்த சிங்கப்பூரர் ஒருவர் தற்பொழுது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

Affair with a domestic worker despite having a first wife – Singaporean caught by MOM.

Low kok peng என்ற சிங்கப்பூரர் கடந்த 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இப்போது அவருக்கு வயதுக்கு வந்த மகள் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது மனைவியுடன் சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த லோ-விற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் சிங்கப்பூரில் வொர்க் பர்மிட் மூலம் பணிப்பெண்ணாக பணியாற்ற வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான அந்த பணிப்பெண் மீது லோ-விற்கு திடீர் காதல் மலர ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து சிங்கப்பூரிலேயே நேரத்தை கழிக்க துவங்கியுள்ளனர்.

லோவிற்கு 51 வயதில் உருவான இந்த காதல் இறுதியில் திருமணத்தில் சென்று முடிந்திருக்கிறது. ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை முதல் மனைவியோ அல்லது கணவனோ விவாகரத்து பெறாமல் இருக்கும் நிலையில் அவர்கள் வேறொரு திருமணம் செய்து கொள்வது Bigamy என்று அழைக்கப்படுகிறது. அதாவது இதை இருதார மனம் என்று அழைப்பார்கள். அரசுக்கு பயந்த லோ, அதே நேரம் அந்த பணிப்பெண்ணின் மீது கொண்ட காதலின் காரணமாக இந்தோனேசியாவில் உள்ள Batam நகருக்கு சென்று இஸ்லாமிய முறைப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்திருக்கிறார். அதேநேரம் சிங்கப்பூருக்கு வந்து தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடும் அவர் அந்த பணிப்பெண்ணுடன் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் நான் சிங்கை மனிதவள அமைச்சகத்திற்கு இந்தோனேசியாவை சேர்ந்த அந்த பணிப்பெண்ணின் நடவடிக்கைகளிலும் அவருடைய திருமண வாழ்க்கை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டு அது குறித்த தீவிர விசாரணைக்கு அழைத்துள்ளது. அப்போதுதான் அவர் ஒரு சிங்கப்பூரரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக மனிதவள அமைச்சகம் இதுகுறித்து சிங்கப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், Batam நகர அதிகாரிகளின் உதவியுடன் லோ ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்த விஷயம் அம்பலமானது. கடந்த சில மாதமாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தற்போது லோவிற்கு இரண்டு வார சரி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து வந்த அந்த பனிப் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. காரணம் சிங்கப்பூருக்கு பெர்மிட்டில் வரும் பிற நாட்டவர்கள் இங்குள்ள சிங்கப்பூரர்களை திருமணம் செய்து கொள்வதற்கு பல விதிமுறைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றை மீறி அந்த பெண் லோவை திருமணம் செய்து கொண்டதால் தற்பொழுது அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.