சிங்கப்பூரில் அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களுடைய வயதான காலத்தில் பிறருடைய உதவிகள் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படவும், நிதி ரீதியாக அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை வழங்கவும் சிங்கப்பூர் அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வங்கி ஏடிஎம்கள் மற்றும் பிற ரொக்கமாக பணம் எடுக்கும் சேவைகளை எளிதாக்குவதை தன்னுடைய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதே போல Cognitive Decline எனப்படும் “அறிவாற்றல் குறைபாட்டின்” பிரச்சினையால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு வலுவான பாதுகாப்பு வழங்கவும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய சேவையில் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் DBS, OCBC மற்றும் UOB ஆகிய வங்கிகள் இணைந்து NETS உடன் இணைந்து இந்த 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஹாக்கர் உணவு மையங்கள் மற்றும் முக்கியமான சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் 500 மீட்டருக்கு ஒரு ஏடிஎம் இயந்திரமும், வங்கி கிளை மற்றும் கேஷ் பாயிண்ட் மையங்களை அமைக்க ஆவணங்கள் செய்யப்பட்டு வருகின்றது.
அது மட்டுமல்லாமல் 2027 ஆம் ஆண்டிற்குள் எல்லா HBD குடியிருப்புகளிலிருந்தும் 500 மீட்டருக்குள் ஒரு ஏடிஎம், வங்கி கிளை அல்லது கேஷ் பாயிண்ட் மையங்கள் இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றும் தெரிய வந்திருக்கிறது. அதேபோல சிங்கப்பூரில் வளர்ந்து வரும் மற்றும் புதிய நகரங்களுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்படும்.
Cash point மையம் என்றால் என்ன?
பணப்புள்ளி அல்லது கேஷ் பாயிண்ட் மையம் என்பது ஒரு வணிக ரீதியான கடையாகும். இதன் மூலம் பயன்பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் NETS திட்ட மூலம் ஏதேனும் பொருட்களை அவர்கள் வாங்கும் பொழுது தங்களுடைய சிங்கப்பூர் வங்கி ஏடிஎம் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி இந்த கடைகளில் ரொக்க பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
ஏற்கனவே சிங்கப்பூரில் டிபிஎஸ்-ன் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் அதனுடைய 1800க்கும் மேற்பட்ட ஏடிஎம்-களை பயன்படுத்தி வருகின்றனர் அது மட்டும் அல்லாமல் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் கோல்ட் ஸ்டோரேஜ் மையங்கள் சிங்கையில் உள்ள 7/11, கார்டியன் பஸ் மற்றும் ஜான்சன் டெலிவரி வணிக கடைகளிலும் DBS வாடிக்கையாளர்களால் இப்போது ரொக்கமாக பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
