சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களின் அடையாளத்தையும் அந்த சமூகத்தின் முன்னேற்றத்தையும் மேம்படுத்துவதற்காக சிங்கப்பூர் அரசு பிரத்தியேகமாக ஒரு குழுவை அமைத்திருக்கிறது. “Indian Engagement and Development Initiative (INEI) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு, சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய சமூகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. நேற்றைய தினம் மார்ச் 5ஆம் தேதி இந்த புதிய முயற்சியின் துவக்க விழா நடைபெற்றது. அதில் நமது சிங்கப்பூரின் கலாச்சாரம் சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் இணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் முக்கியமான பல அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த குழு சிங்கையில் வாழும் இந்திய சமூகத்தின் நலன்களையும், எதிர்கால சந்ததிகளுக்கு நாம் கொண்டு போக வேண்டிய விஷயத்தையும் ஆராயும் என்று உறுதி அளித்தார்.

Indian community in Singapore – Why did the Singapore government allocate 20 million dollars?

மேலும் இந்த குழுவை தலைமைதாங்கி நடத்தவிருக்கும் அமைச்சர் தினேஷ் அவர்களுடன் இணைந்து சிங்கையின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளி பிள்ளை அவர்களும் தலைமை தாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே தமிழக வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சிங்கையின் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் இந்த இருவரும் INEI குழுவை வழிநடத்தி செல்லவுள்ளனர்.

இந்த குழுவின் நோக்கம் என்ன?

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தான் இந்த குழுவின் முக்கிய நோக்கமாகும். இதற்காக கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிங்கப்பூரில் இருக்கும் 150 க்கும் மேற்பட்ட குழுக்கள் இடமும் பல இந்தியர்களுடனும் நடந்த கலந்துரையாடலுக்கு பிறகு இந்த குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு இந்தியாவினுடைய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் எதிர்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்லும் அதே நேரம், இங்குள்ள இந்திய சமூகத்தில் பின்தங்கிய வகுப்பில் வாழும் குடும்பங்களுக்கு உதவும். அதை சேர்ந்த மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும். அதில் உள்ள இளைஞர்களுக்கு தேவையான எதிர்கால வழிகாட்டுதல்களையும் வழங்க பல முன்னெடுப்புகளை இந்த குழு செய்ய உள்ளது.

சிங்கப்பூர்வால் இந்தியர்களின் தனித்துவமான மற்றும் அழகான அடையாளத்தை வலுப்படுத்துவதோடு ஒரு பல்லின சமூகமாக விளங்கும் சிங்கப்பூரின் உரிமைகளை பாதுகாக்கவும் இந்த குழு உறுதி எடுத்துள்ளது. ஏற்கனவே சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் சிங்கப்பூர் இந்தியன் டெவெலப்மென்ட் அசோசியேசன் மற்றும் இங்குள்ள இதர இந்திய அமைப்புகளுடன் இணைந்து இந்த குழு முழு வீச்சில் செயல்பட உள்ளது. இந்த குழுவின் இரு தலைவர்களுள் ஒருவனான அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் பேசுகையில்.. “எங்கள் இந்திய சமூகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் வெறும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தோடு நின்று விடப் போவதில்லை. அதைத் தாண்டி சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான வளர்ச்சியை எட்டுவதே இந்த குழு உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும்” என்று கூறினார்.

இந்த புதிய முழு முயற்சியானது சிங்கப்பூரில் இப்போது வசித்து வரும் இந்திய வம்சாவளியினரிடம் நிலவும் சிறு சிறு பிரச்சனைகளையும் அவர்களுடைய நீண்ட கால நலன்களையும் பல்லின சமூகத்தை அரவணைத்துக் கொள்ளும் நமது சிங்கையின் சமூக நலத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்