இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று தான் டாட்டா, உலக அளவில் பல்வேறு வகையான வியாபாரங்களில் கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களில் டாடாவும் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் பிரபல “டாட்டா ஸ்டீல்” நிறுவனம் இந்தியாவில் உள்ள தன்னுடைய வணிகங்களை வலுப்படுத்த, மற்றும் உலக அளவில் அதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. மேலும் மிகப்பெரிய அளவில் நிதி மற்றும் நிர்வாக மாற்றங்களையும் டாடா ஸ்டீல் நிறுவனம் இப்பொழுது அறிவித்திருக்கிறது. அதன்படி டாட்டா ஸ்டீல் நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமாக செயல்படுத்தி வரும் NINL நிறுவனத்தை துணை நிறுவனத்திலிருந்து நீக்கி முழுமையாக தன்னுடன் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தற்பொழுது செய்து வருகிறது.

Around ₹16,000 crore investment in Singapore – India’s Tata Group to take a mega decision.

இந்த இணைப்பு மூலம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள அந்த ஆலையில், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்திற்கு நீண்ட காலமாக தேவைப்படும் உற்பத்தி திட்டங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் தன்னுடைய துணை நிறுவனமாக இருந்த ஒரு நிறுவனத்தை, தன்னோடு முழுமையாக இணைத்து கொள்வதனால் நிர்வாக செலவுகளும் பெரிய அளவில் குறையும். அதே நேரம் தன்னுடைய திறனையும் அதிகரிக்க முடியும் என்று டாட்டா ஸ்டீல் நம்புகிறது.

சிங்கையில் 16,000 கோடி முதலீடு..!

முன்பே கூறியதைப் போல பிரபல டாட்டா ஸ்டீல் நிறுவனம் உலக அளவில் தன்னுடைய வணிகத்தை சிறப்பாக செய்து வரும் நிலையில், தற்போது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் “T Steels Holdings பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இந்திய மதிப்பில் சுமார் 16,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புதல் அளித்து இருக்கின்றது. இந்த முதலீடு ஒரே கட்டமாக செய்யப்படாது என்றாலும், அடுத்தடுத்த நிதியாண்டுகளில் இந்த 16,000 கோடி சிங்கப்பூரில் முதலீடு செய்ய டாட்டா ஸ்டில்ஸ் உறுதி எடுத்து இருக்கிறது. இந்த நிதியானது சிங்கை உள்ளிட்ட பிற நாடுகளில் இருக்கும் தன்னுடைய பழைய கடன்களை தீர்க்க உதவும் என்று நம்பப்படுகிறது.

நமது சிங்கப்பூர், இந்தியாவில் பல லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை செய்துவரும் நிலையில் இந்தியாவின் மிக மிக பிரபலமான நிறுவனம் ஒன்று நமது சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 16,000 ரூபாய் முதலீடு செய்திருப்பது மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனால் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு சந்தையும் தற்பொழுது அதிக கவனம் பெற்றுள்ளதால் அதில் அதிக முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன் வருகின்றன. காரணம் இம்முறை டாட்டா ஸ்டீல்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் முதலீடு செய்வதால் இது பலருக்கு பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

டாட்டா ஸ்டில்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியை இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் உயர் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒடிசாவில் உள்ள தன்னுடைய ஆலையில் அது பெரிய அளவில் மாற்றங்களை செய்ய உள்ளது. மேலும் டாட்டா நிறுவனத்தின் இந்த புதிய முடிவு உலகளாவிய ஸ்டீல் சந்தையில் தன்னுடைய ஆதிகத்தை பெரிய அளவில் நிலை நிறுத்தும் என்றும் பங்குச்சந்தை ரீதியாகவும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பெரும் நன்மையை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.