கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தொடங்கியது ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையான போர். இதனால் மேற்கு ஆசியாவிலும் பல வகைகளில் இடையூறு தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உலகளாவிய இந்த நெருக்கடி, அவ்வளவு விரைவில் முடிவுக்கு வராது என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் நமது சிங்கை பிரதமர் லாரன்ஸ் வோங். தற்பொழுது சிங்கப்பூரிலும், உலக அளவில் நிலவும் சூழல் குறித்து பேசிய அவர் எதிர்வரும் மாதங்களில் பணம் வீக்கம், நிச்சயமற்ற பொருளாதார நிலை, அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் பெரும் பின்னடைவு போன்ற பல விஷயங்களை நாம் எதிர்கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறி இருக்கிறார். இதுகுறித்து நான்கு முக்கிய விஷயங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்
முதலாவது நீண்ட காலத்திற்கு நீடிக்கும் பாதிப்பு
அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் தற்பொழுது போர் பதற்றம் காரணமாக எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் அவற்றை உலக அளவில் விநியோகம் செய்கின்ற பாதைகளில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. இதுதான் உண்மையில் மிகப்பெரிய பிரச்சனையாக சிங்கப்பூருக்கும் உலகிற்கும் மாற உள்ளது. தற்பொழுது மூடப்பட்டிருந்தாலும் விரைவில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும். ஆனால் அப்படியே அது திறக்கப்பட்டாலும் இந்த பாதிப்புகள் உடனடியாக நம்மை விட்டு நீங்காது. ஏற்கனவே கடற் பரப்பில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், சேதமடைந்த உள் கட்டமைப்புகளை சீரமைப்பதற்கும் பல மாதங்கள் ஆகும் என்பதனால் நமக்கும் இந்த உலகிற்கும் இயல்பு நிலை திரும்ப நீண்ட காலம் எடுக்கும்.
பொருளாதார சவால்கள்.
சிங்கப்பூர் மட்டுமன்றி உலக அளவில் பணவீக்கம் என்பது அதிகரிக்கும். இது எரிசக்தியில் தொடங்கி உணவு பொருளின் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றும் வரை பரவும். பல நாடுகளில் பொருளாதார மந்திரங்களை ஏற்படவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக நமது சிங்கப்பூர் போன்ற மைக்ரோ நேஷன்கள் இந்த பாதிப்புகளை நேரடியாகவே உணரக்கூடும் என்றார் அவர்.
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு.
எரிசக்தி மட்டுமல்லாமல் உரம் மற்றும் உணவுப் பொருட்களின் விநியோகமும் பெரிய அளவில் இந்த எரிபொருள் பிரச்சனையால் பாதிக்கப்படுவதால் பல பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் ஏற்படலாம். ஆசிய நாடுகளை பொறுத்தவரை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம், தொழிற்சாலைகளில் உற்பத்தியும் தாமதமாக வாய்ப்புகள் இருக்கிறது என்றார் அவர்.
1970களை காட்டிலும் மோசமான நிலை.
கிட்டத்தட்ட 56 ஆண்டுகளுக்கு முன்பு 1970களில் ஒரு எண்ணெய் விலையேற்றம் ஏற்பட்டது. ஆனால் அப்பொழுது ஏற்பட்ட அதிர்ச்சியை விட மோசமானதாக இப்பொழுது ஏற்படவிருக்கும் இந்த பிரச்சனை இருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார் சிங்கப்பூர் பிரதமர். ஆகவே சிங்கப்பூர் மக்கள் அதிக பணம் வீக்கம் மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.