சிங்கப்பூர் தொடர்ச்சியாக தன்னுடைய இயற்கை வளத்தை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில் சிங்கை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கும் வண்ணம் “Greater Sentosa” என்கின்ற மேம்பாட்டு திட்டத்தை இப்பொழுது அரசு அறிவித்திருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
Sentosa is going to the next level! – Tourist island prepares with exciting new changes.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக இன்றளவும் விளங்கி வருவது தான் சென்டோசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். இந்த நிலையில் அதில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வரும் நோக்கத்தில் நமது சிங்கப்பூர் அரசு “கிரேட்டர் சென்டோசா” என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் நமது சிங்கப்பூரின் கடற்கரை அழகை சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் ரம்மியமான வகையில் ரசிக்கும் வண்ணம் புதிய பல ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரையை ஒட்டி செல்லும் நடைபாதைகள் பெரிய அளவில் அமைக்கப்பட உள்ளன. இவை சென்டோசாவின் பல்வேறு பகுதிகளை இணைப்பதோடு மக்கள் மத்தியில் நடக்கும் பழக்கத்தையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் இதனால் பெரிய அளவில் பயனடைவார்கள். இந்த சென்டோசா பகுதியில் உலகத்தரம் வாய்ந்த தங்குமிட வசதிகள், பெரிய பெரிய ஹோட்டல்கள், நவீன வசதி உடன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பல நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
மேலும் இந்த “கிரேட்டர் சென்டோசா” திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது உள்ள சிங்கப்பூரின் சிலோசோ, பலவான் மற்றும் தஞ்சோம் போன்ற கடற்கரை பகுதிகளும் மென்மேலும் அழகு படுத்தப்பட உள்ளது. அங்க புதிய பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு விடுதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களையும் உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதே நேரம் இந்த “கிரேட்டர் சென்டோசா” திட்டம் என்பது சென்டோசா தீவை மட்டுமல்லாமல் அதன் அருகில் இருக்கின்ற Pulau Brani தீவையும் உள்ளடக்கி மாற்றங்கள் செய்யப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் இது ஒரு மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாறும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த தீவுக்குகளுக்குள் மக்கள் எளிதாக பயணம் செய்ய மின்சார வாகனங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன நடைபாதைகள் போன்ற வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன. இது மக்கள் மத்தியில் ஒரு பசுமை பயணத்தையும், நடைபழக்கத்தையும் இன்னும் ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே தொடங்கப்பட்ட Sensoryscape போன்ற திட்டங்களும் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளை இணைக்கும் ஒரு முக்கிய பாலமாக செயல்படும்.
சிங்கப்பூர் அரசாங்கமும். சென்டோசா மேம்பாட்டு கழகமும் இணைந்து தான் இந்த பணிகளை விரைவில் துவங்க உள்ளன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் இங்கு பணிகள் நடக்கும் என்றும், அதன் பிறகு சிங்கப்பூரின் பிரதான சுற்றுலா மையமாகவும், உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் பிடித்த இடமாகவும் இது மாற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. சிங்கப்பூரை ஒரு முன்னணி உலகளாவிய சுற்றுலா மையமாக தக்கவைத்துக் கொள்ளவும், உள்ளூர் பொருளாதரத்தை அதன் மூலம் மேம்படுத்தவும் இது பெரிய அளவில் உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.