பல அறிஞர்களும் கணித்ததை போல ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் உலக அளவில் பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் உட்பட பல்வேறு விமான நிறுவனங்கள் புதிய வகை சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் ஏற்படும் பிரச்சனை குறித்து சிங்கப்பூர் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAS) தற்பொழுது தன்னுடைய தீவிர கண்காணிப்பை முன்னெடுத்து வருகிறது.

“Passenger safety is the priority” – Singapore CAAS issues advisory to airlines.

அதாவது ஒரு விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படுவது என்பது அதனுடைய பயண தூரம் மற்றும் தரையிறங்கும் இடத்தில் உள்ள விமானங்களின் எண்ணிக்கையை பொறுத்து தான் இருக்கும். ஆனால் தற்பொழுது எரிபொருள் தட்டுப்பாடும் அதனுடைய விலையும் உயர்ந்துள்ளதால் ஏற்கனவே விமான சேவை நிறுவனங்கள் எரிபொருள் நிரப்புவதில் பிரச்சனையை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் ஒரு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தாமதமானால் வானில் வட்டமடிக்கும் மற்றோரு விமானத்தின் எரிபொருள் இருப்பு என்பது குறைந்து விடும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எரிபொருள் அவசர நிலை தொடர்பாக பல விமானங்கள் சிக்கலை சந்தித்து இறுதி நிமிடத்தில் பத்திரமாக தரையிறக்க பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது போன்ற சிக்கல்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்ய தொடங்கி இருக்கிறது சிங்கப்பூர் சிவில் ஏவியேஷன் ஆணையம். காரணம் இதில் விமான எரிபொருள் என்பது அதில் பயணிக்கும் மக்களின் வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக விமானங்களில் அவை பறக்கும் தூரத்திற்கு ஏற்ப தான் எரிபொருள் நிரப்பப்படும். ஆனால் தற்பொழுது போர் நடக்கும் பகுதிகளை தவிர்த்து பிற வழிகளில் பயணம் செய்வதால் அதனுடைய வழக்கமான விமான பாதைகள் நீட்டிக்கப்படுகிறது. அதனால் விமான நிறுவனங்கள் தங்களுடைய விமானங்கள் எதிர்பாராத நீண்ட பயணங்களை முன்கூட்டியே கணித்து அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான அளவு எரிபொருளை விமானத்தில் வைத்திருப்பதை உறுதி செய்ய நேரிடுகிறது.

ஏற்கனவே எரிபொருள் உயர்வால் கடும் நெருக்கடியை விமான சேவை நிறுவனங்கள் சந்தித்து வரும் நிலையில் இந்த புதிய பிரச்சனை விமான சேவை நிறுவனங்களுக்கு வெறும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய சிவில் ஏவியேஷன் ஆணையம் அதிகாரி “எரிபொருள் விலை உயர்வால் நிதி நெருக்கடிகளை விமான சேவை நிறுவனங்கள் எதிர்கொண்டாலும் அவை பாதுகாப்பிற்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும், பாதுகாப்பு தரநிலைகளில் எந்த நேரத்திலும் சமரசம் செய்து விடக்கூடாது” என்று அவர் கூறினார். அதனால் நமது சாங்கி விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இயங்கும் ஒவ்வொரு விமானத்தின் பாதுகாப்பையும் அதன் செயல்பாடுகளையும் சிவில் ஏவியேஷன் ஆணையம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதேநேரம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் விமான பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்துள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பும் வெளியாகி உள்ளது. அந்த பிராந்தியத்தில் கடந்த 2023 ஒரு மில்லியன் விமான புறப்பாடுகளுக்கு 0.78ஆகா இருந்த விமான விபத்து விகிதம் 2024ல் 1.62 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் 72 என்ற இருந்து தற்போது 186 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.