இணைய வழியில் போலியான பொருட்களை விற்பனை செய்ததாக சிங்கப்பூரில் இரண்டு பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த இரண்டு பெண்களிடம் இருந்து சுமார் 14,000 சிங்கப்பூர் டாலர் அளவிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Fake branded products worth around $14,000 – Two women caught in Singapore.
நேற்று மே 29ஆம் தேதி சிங்கப்பூர் காவல்துறை ஒரு அதிர்ச்சிமிக்க தகவலை வெளியிட்டது அதில் இந்த 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் 27 மற்றும் மே 19 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் Yishun Ring Road, Gambas Crescent, Bukit Batoo West Avenue 4 மற்றும் Bukit Batok Crescent ஆகிய இடங்களுக்கு அருகில் நடத்தப்பட்ட ஒரு அதிரடி சோதனையில் 30 மற்றும் 47 வயது உடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
இந்த அதிரடி சோதனையின் போது குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளும் உடன் இருந்திருக்கிறார்கள். அதில் “டிரேட் மார்க்” எனப்படும் முத்திரை விதிகளை மீறியதாக கூறப்படும் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதாவது போலி முத்திரையிடப்பட்ட ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள், கண்ணாடிகள் மற்றும் பிற ஆடம்பர மற்றும் பிராண்டட் ஆபரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவை எங்கிருந்து சிங்கப்பூருக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த பொருட்களின் தோராயமான சந்தை மதிப்பு தற்பொழுது 14,800க்கும் அதிகமான சிங்கப்பூர் டாலராக இருக்கும் என்று போலீசார் மதிப்பிட்டு இருக்கின்றனர். இதுகுறித்து அந்த இரண்டு பெண்களிடமும் தொடர்ச்சியாக காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் வர்த்தக நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றும் வகையில் போலியான வர்த்தக முத்திரைகள் இடப்பட்ட பொருட்களை வைத்திருந்தது மற்றும் அவற்றை விற்பனைக்கு கொண்டு சென்றது போன்ற குற்றச்சாட்டுகள் அந்த பெண்கள் மீது முன்வைக்கப்பட்டிருக்கிறது.
ஒருவேளை அந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் பட்சத்தில் கைதான அந்த இரண்டு பெண்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வெள்ளி வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் சிறையும் அல்லது இரண்டும் இணைத்தும் விதிக்கப்படலாம். சிங்கப்பூரை பொறுத்தவரை பல நாடுகளின் அதிகாரப்பூர்வ மற்றும் பிராண்டட் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு மாபெரும் இடமாக இருக்கின்றது. அதனால் இங்கு போலியான பிராண்டட் பொருட்களை விற்க சில மோசடி கும்பல்கள் கடந்த பல ஆண்டுகளாகவே முயற்சியில் எடுத்து வருகின்றது.
அதில் ஒரு முயற்சியாகவே இந்த சம்பவமும் பார்க்கப்படுகிறது. இப்படி போலியான அடையாளத்துடன் விற்கப்படும் பொருளின் தரமும் குறைவாகவே இருக்கும் என்பதால் அது குறிப்பிட்ட அந்த உண்மையான பிராண்டின் பெயரை இது பாதிப்படையைச் செய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால் தொடர்ச்சியாக சிங்கப்பூர் காவல்துறை இதற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
