சிங்கப்பூரில் சர்க்கிள் லைன் MRT தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இறுதி சுற்று தற்பொழுது நிறைவு செய்கின்ற வகையில் கெப்பல், கன்டோன்மென்ட் மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் சாலை ஆகிய மூன்று புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன (ஜூலை 12ம் தேதி). இந்த மூன்று புதிய ரயில் நிறுத்தங்களும் ஹார்பர் ஃபிரண்ட் மற்றும் மெரீனா பே நிலையங்களுக்கு இடையிலான இணைப்பை கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து முழுமை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் MRT பயணிகளின் பயண நேரம் குறைவதோடு அதற்கு அவர்கள் செலுத்தும் கட்டணமும் குறைய உள்ளது. காரணம் நமது சிங்கப்பூரின் பொது போக்குவரத்து கவுன்சில், இந்த நிறுத்தங்களுக்கு மிகக் குறுகிய தூர கட்டணத்தையே கணக்கீட உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் அந்த நிறுத்தங்களில் MRT ரயில்கள் நிறுத்தப்படவில்லை என்றாலும் பல பயணிகள் தற்பொழுது அதன் வழியாக பயணம் செய்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 20 வயது இளைஞர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுவையில் தன்னுடைய வார இறுதி நாட்களில் Bras Basah Complex-ல் நடக்கும் தன்னுடைய சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அது மிகவும் சுற்றளான ஒரு பயணமாக இருந்து வந்தது. கிளமெண்ட்டி பகுதியில் இருக்கக்கூடிய தன்னுடைய இல்லத்தில் இருந்து ஹா பார் வில்லா அருகே உள்ள பேருந்து நிலையத்திலிருந்து தன்னுடைய 13 நிமிட பயணத்தை அவர் தொடங்குவார்.

பின் அங்கிருந்து புக்கிஸ் MRT நிலையத்திற்கு 31 நிமிட பயணம் செய்து அங்கிருந்து ஏழு நிமிடங்கள் நடந்து சென்று தன்னுடைய இடத்தை அவர் அடைந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் தற்பொழுது தன்னுடைய அந்த மிகு நீண்ட பயணமானது மிக மிக குறைவான நேரத்தை எட்ட உள்ளது அவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ஹா பார் வில்லா MRT நிலையத்திற்கு எட்டு நிமிட பேருந்து பயணத்திலும் அங்கு இருந்து சர்க்கிள் லைன் மூலம் Esplanade MRT நிலையத்திற்கு 22 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றும் அதனால் அவருடைய பயண நேரம் பெரிய அளவில் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.

இதுபோல இன்னும் பல சிங்கப்பூரர்கள் மற்றும் இங்கு பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மூன்று ரயில் நிறுத்தங்கள் பெரிய அளவில் நன்மையை தரவிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் இந்த பயண நேரங்கள் குறைவதோடு சில வழித்தடங்களில் பயணிகள் மிக குறைவான கட்டணத்தையே செலுத்த உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பயணி செல்லும் வழித்தடம் மற்றும் பயண நேரத்தை பொறுப்பெடுத்தாமல் தொடக்கம் மற்றும் அவர் இறங்குகின்ற இடங்களுக்கு இடையே உள்ள குறுகிய தூரத்தின் அடிப்படையில் தான் MRT கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றது என்று பொழுது போக்குவரத்து கவுன்சில் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

அதனால் இந்த மூன்று புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்படுவதால் சில பயணிகளுடைய பயண தூரம் குறைந்து அவர்களுக்கான கட்டணமும் குறையும் என்றும் கவுன்சில் தெரிவித்திருக்கிறது. ஒருவேளை பயணிகள் தங்களுக்கு என்று விருப்பமான நீண்ட வழி பயணத்தை தேர்ந்தெடுத்து அவர்கள் பயணித்து சென்றாலும் அவர்களுக்கு மிக குறுகிய தூரத்திற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.